தென் இந்தியாவின் ஃபில்டர் காஃபி உலக அளவில் சிறந்த 38- காஃபி வகைகளில் இரண்டாவது இடத்தைப் ('Top 38 Coffees In The World') பிடித்துள்ளது.
காஃபி ப்ரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
பிரபலமான உணவு மற்றும் பயணங்களை நிர்வகிக்கும் நிறுவனமான TasteAtlas - 2023- 2024 ம் ஆண்டு மிகவும் பிரபலமான உணவுகள் இடங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் உலகில் சிறந்த உணவகங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அது குறித்து விசமர்சனம் செய்யும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக அளவில் உள்ள 38 காஃபி வகைகள் குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்திய வகை ஃபில்டர் காஃபி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்திய வகை காஃபிக்கு நல்ல ரேட்டிங்க் கிடைத்துள்ளது. Cuban Espresso'
TasteAtlas நிறுவனம் வெளியிட்ட 38 காஃபி வகைகள் பட்டியல்..
- Cuban Espresso (Cuba)
- Filter Coffee (India)
- Espresso freddo (Greece)
- Freddo cappuccino (Greece)
- Cappuccino (Italy)
- Turkish Coffee (Turkiye)
- Ristretto (Italy)
- Frappe (Greece)
- Eiskaffee (Germany)
- Vietnamese Iced Coffee (Vietnam)
இதே நிறுவனம் கடந்த சில மாதங்களாக எடுத்த கணக்கெடுப்பில், மசாலா டீ உலகின் இரண்டாவது மிகச் சிறந்த ஆல்ஹகால் இல்லாத பானம் (Second-Best Non-Alcoholic Beverage) என பெயர் பெற்றுள்ளது. முன்னதாக மேங்கோ லஸ்ஸி ‘ 'Best Dairy Beverage In The World' என்ற பெருமையை பெற்றிருந்தது. PanCake பிரிவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு. ’Crêpe' - என்ற மெலிதாக தயாரிக்கப்படும் Pancake முதலிடம் பிடித்துள்ளது. மசாலா தோசை 12-வது இடத்தை பிடித்தது.
சூடான பாலில் தேவையான அளவு டிகாஷன் சேர்த்து சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் காஃபி சட்டென மனதை லேசாக்கிவிடும். உலகளவில் தென்னிந்திய ஃபில்டர் காஃபி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு பலரும் கமெண்ட் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.