உடல் எடையைக் குறைக்க எப்போதுமே அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உள்ள உணவுகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. அப்படியான உணவுகளில் அதிகம் விரும்பப்படுவது போஹா என்னும் அவல் உப்புமா. 


போஹாவை ப்ரோட்டீன் நிறைந்த உணவு எனச் சொல்லலாம். சில நிமிடங்களில் செய்யக்கூடிய இந்தக் காலை உணவைத் தயாரிக்க, ஒரு சிறிய கிண்ணத்தில் போஹா மற்றும் ஓட்ஸ் இரண்டையும் ஊறவைக்கவும். கடாயில் நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சில நிமிடங்கள் இது நன்கு சமைத்ததும், பின்னர் பட்டாணி, கேரட், காளான் மற்றும் கேப்சிகம் சேர்த்து வதக்கவும்.


அவை ஒன்றாகச் சமைத்த பின்னர் அவல் மற்றும் ஓட்ஸை வாணலியில் சேர்க்கவும். பிறகு வாணலி குறைந்த தீயில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். ருசிக்க உப்பு, மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருள்களையும் சேர்க்கவும். பின்னர், அதில் பயிர் வகைகள் மற்றும் வேர்க்கடலை சேர்க்கவும். இதனை நன்கு கிளறிய பின்னர் அவலை இளஞ்சூட்டில் சுமார் 8 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்!


சுவையான, மிருதுவான, நன்றாக உப்பிய அவல் செய்ய 5 டிப்ஸ்:


1. அவலை வைத்து காலை உணவு என்பது தமிழகத்தைத் தாண்டி கர்நாடகா ஆரம்பித்து மகாராச்டிரா, டெல்லி, குஜராத் எனப் பல மாநிலங்களிலும் ரொம்பவே பிரபலம். ஆனால் அவல் செய்வதில் முதலில் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அதை செய்யாவிட்டால் அவல் ரெஸிப்பிக்கள் எல்லாம் அய்யகோ ரெஸிபி ஆகிவிடும். 


அதனால் அவலை அட்டகசமாக செய்ய சில டிப்ஸ்களை வழங்குகிறோம். அதில் முதலாவது அவலை நன்றாக அலசுவதாகும். குழாய் நீரில் நன்றாக அவலை அலசி எடுத்து, பிளிந்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்றாக உலர வைக்க வேண்டும்.


2. அவலை அதிக நேரம் ஊறவைக்க வேண்டாம். நன்றாக அலசிய பின்பு, அதை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இருப்பினும், அதை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஊறவைக்க வேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் ஊறவைப்பது அதன் அமைப்பைக் கெடுக்கும். இது அவலை கூடுதல் ஈரமாக்கி விரும்பத்தக்காததாக மாற்றிவிடும்.


3. அவல் நன்றாக ஊறி உப்பிவந்தால் அதில் செய்யும் உணவும் ருசியாக இருக்கும். அதனால் அவலை செய்யும் முன்னர் அதை கையால் கொஞ்சம் நீவிவிட்டால் அது தனித்தனியாக பிரிந்துவிடும். பின்னர் முள்கரண்டியை வைத்து லேசாக அதன் மீது குத்திவிடலாம். இது அவல் உப்பிவர உதவும்.


4. பெரும்பாலானோர் அவல் சமைப்பதில் செய்யும் ஓர் பொதுவான தவறு, அதிக சூட்டில் சமைப்பது. அதிக நேரம் அதிக சூட்டில் சமைப்பதால் அவல் வரண்டு, சாப்பிடுவதற்கு கடினமாகிவிடும். அவலில் உள்ள ஈரத்தன்மையை தக்கவத்துக்கொள்ள, சிறிது நேரம் மட்டுமே அதனை கொதிக்க வைப்பது நன்று.


5. ஒருவேளை, நீங்கள் சமைத்த அவல் இன்னுமும் வரண்டு போயிரிந்தால், அதில் சிறிது பால் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். இவற்றை  சேர்த்துக்கொள்வதால் ஈரப்பதம் குறையாமலிருப்பது மட்டுமின்றி, நீங்கள் சமத்த அவலின் ருசியையும் கூட்டுகிறது. அவலை சமைத்து முடிது பின்னர் இவற்றுள் ஏதேனும் ஒன்றினை சேர்த்து, 4 முதல் 5 நிமிடங்கள் வரையிலும் மூடிவைத்து எடுத்த பின்னர் பரிமாறவும்.