இந்தியாவின் மிகப் பிரபலமான் ஸ்ட்ரீட் ஃபுட் என்றால் அது சமோசா தான். சமோசாவில் காரம், இனிப்பு என நிறைய வகை உண்டு. இப்போதெல்லாம் சிக்கன் கீமா சமோசா கூட கிடைக்கிறது.


Chowmein samosa சவுமீன் சமோசா


இது இந்தியா சீனா கொலாபரேஷன் என சொல்லலாம். சமோசா இந்தியாவில் பிரபலம். நூடுல்ஸ் சீனாவில் பிரபலம். இந்த இரண்டின் ஃப்யூஸன் தான் சவுமீன் சமோசா. நூடுல்ஸ் கேரட், முட்டைக்கோஸ் எல்லாவற்றையும் சேர்த்து ஸ்டஃபிங் செய்து அதனை சமோசாவினுள் வைத்து செய்தால் அதுதான் சவுமீன் சமோசா.


தேவையான பொருட்கள்:
1 பவுல் நூடுல்ஸ்
1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
2 வெள்ளைப்பூண்டு பற்கள்
அரை கப் சிறிதாக வெட்டிய பன்னீர்
1 வெங்காயம் நறுக்கியது
1 குடைமிளகாய் ஸ்லைஸ் செய்தது.
2 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ்
1 டீஸ்பூன் வினிகர் 
2 கப் மைதா
1 கப் ஆட்டா
1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் ஓமம்


செய்முறை:
ஒரு வடசட்டியில் எண்ணெய் சேர்க்கவும். பின்னர் அது சூடானதும் வெள்ளைப்பூண்டு, வெங்காயம் சேர்க்கவும். அது நன்றாக வதங்கியபின்னர் கேரட், குடைமிளகாய், முட்டிஅ கோஸ் எல்லாவற்றையும் 2 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பின்னர் அதில் உப்பு, சோயா சாஸ், வினிகர், வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து டாஸ் செய்யவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.


சமோசா செய்வது எப்படி?
மைதாவையும், ஆட்டாவையும் சேர்த்துக் கொள்ளவும்.
அதில் கொஞ்சம் உப்பு, ஓமம் சேர்க்கவும்.
பின்னர் மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மாவில் தண்ணீர் சேர்த்து பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
மாவு 20 முதல் 30 நிமிடங்கள் நன்றாக ஊறட்டும்.
பின்னர் அதனை வட்ட வடிவில் தேய்த்து, அதை பாதியாக வெட்டி, கோன் வடிவில் ஆக்கி அதனுள் சவுமீன் என்ற நூடுல்ஸ் ஸ்டஃபிங்கை வைக்கவும். சுற்றிலும் தண்ணீர் தடவி மூடிவிடவும். பின்னர் சூடான எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.


சமோசாவுக்கு தடை விதித்த நாடு தெரியுமா?


ஒரு நாட்டின் உணவு அதன் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மக்கள் என பல தகவல்களைத் தன்னுள் கொண்டுள்ளது. மேலும் சற்று ஆராய்ந்தால், காலநிலை, மக்கள்தொகை, சமூக பொருளாதார அல்லது சுற்றுச்சூழல் காரணங்களைப் பொறுத்து உணவுகள் இடத்திற்கு இடம் மாறுபடும். ஒரு நாட்டிற்கு அல்லது பிராந்தியத்திற்கு பிரத்யேகமான சில உணவுப் பொருட்கள் இருந்தாலும், சில நாடுகளில் வியக்கத்தக்க வகையில் தடைசெய்யப்பட்ட சில உணவுகளும் உள்ளன. நம் நாட்டில் அனைத்து மக்களாலும் விரும்பப்படும் சில உணவுகள் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன என்றால் நம்ப முடிகிறதா? 


சமோசா இந்தியாவில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி ஆனால் தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள சோமாலியா 2011ம் ஆண்டு முதல் இந்த சுவையான உணவான சமோசாவுக்குத் தடை விதித்துள்ளது. சமோசாவில் தடைவிதிக்க அப்படி என்ன இருக்கு? காரணம் சற்று வியப்புதான். சமோசாவின் முக்கோண வடிவம் ‘அல் ஷபாப்’ என்னும் ஒரு குழுவினருக்கு கிருத்துவத்தின் அடையாளமாகத் தெரிகிறதாம். அதனால் இது தடை செய்யப்பட்டுள்ளதாம். உண்மையில், நாட்டின் சட்டத்தின்படி, இந்த சட்டத்தை மீறுவது கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கும். சமோசா சாப்பிட்டா அதோகதிதான்!