லுக்மி என்பது ஹைதராபாத்தில் பிரபலமான சுவையான சமோசாவாகும். இது ஒரு அசைவ வகை சமோசா. இறைச்சி மற்றும் மசாலா பொருட்களை கொண்டு இந்த லுக்மி தயாரிக்கப்படுகின்றது. இறைச்சி மற்றும் மசாலா சேர்ந்த இந்த சமோசாவின் சுவை அலாதியாக இருக்கும். மாலை நேரத்தில் ஒரு காரசாரமான நிறைவான ஸ்நாக்ஸ்


தேவையான பொருட்கள்


300 கிராம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி, 2 கப் மைதா, 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது, 150 கிராம் வெண்ணெய், 1/4 தேக்கரண்டி மருந்து(haldi), 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1 வெங்காயம் நறுக்கியது, 1 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்,, 2-3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, எண்ணெய் -தேவையான அளவு, 2-3 பச்சை மிளகாய், உப்பு-சுவைக்கேற்ப. 


முதலில் லுக்மிக்கு மாவை தயார் செய்ய வேண்டும். இதற்கு, ஒரு பாத்திரத்தில் மைதா, எலுமிச்சை சாறு, வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். இதை சில நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.


2.ஸ்டஃபிங்கிற்கு, ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.


3.அடுத்து, மஞ்சள்(haldi), கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் உட்பட அனைத்து உலர்ந்த மசாலாக்களையும், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லியுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.


4. கீமாவை(keema ) சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும்.


5.மாவின் ஒரு சிறிய பகுதியை எடுத்து செவ்வக வடிவில் உருட்ட வேண்டும்.


தயாரிக்கப்பட்ட கீமா கலவையை ஒரு ஸ்பூன் அளவு மையத்தில் வைத்து, ஒரு முட்கரண்டியைப் பயன்படுத்தி விளிம்புகளை நன்றாக மூடவும்.


6.ஒரு கடாயில் லுக்மியை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். இப்போது தயார் செய்து வைத்துள்ள லுக்மியை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை நன்கு வேக விட வேண்டும் . இப்போது சுவையான லுக்மிகள் தயார் ஆகி விட்டன. இதை சூடாக பறிமாறலாம்.