முடக்கத்தான் கீரை :
நம்மை சுற்றி இருக்கும் இயற்கையில் ஏராளமான நலன்கள் கொட்டிக்கிடக்கிறது. எப்படி ஒரு சத்து நிறைந்த கீரை வகைதான் முடக்கதான் கீரை. முடக்கம் என்றால் கை, கால்களில் ஏற்படும் ஒருவகை நோய். அந்த நோயை குணப்படுத்தும் ஆற்றல் இந்த கீரைக்கு இருந்ததால் முடக்கு அறுத்தான் என்ற பெயருடன் அழைக்கப்பட்டு காலப்போக்கில் முடக்கத்தான் என்றானது. இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் கை , கால் மூட்டு வலி , எலும்பு தேய்மானம், முடக்கு வாதம் , உடல் வலி , மூலம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.சரி இந்த தொகுப்பில் ஆரோக்கியமும் ருசியும் கொண்ட முடக்கத்தான் தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
முடக்கத்தான் கீரை செய்ய தேவையான் பொருள் :
முடக்கத்தான் கீரை – 2 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்’
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உளுத்தப்பருப்பு– 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம்பருப்பு ஆகிவற்றை ஒன்றாக சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைக்கவும்.மிஸ்சியில் அரைப்பவராக இருந்தால் 4 முதல் 5 மணி நேரம் வரையில் ஊர வைக்க வேண்டும்.ஓரளவிற்கு அரைந்தவுடன் , ஓடிக்கொண்டிருக்கும் மாவில் சுத்தம் செய்து , நறுக்கிய முடக்கத்தான் கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும். கிடைத்த மாவினை 7 முதல் 8 மணி நேரம் புளிக்க வைத்துக்கொள்ளுங்கள்.தற்போது தோசை மாவு தயார். இதனை தோசையாக வார்த்து அதனுடன் நெய் அல்லது நல்லெண்ணையை சேர்த்து மொறு மொறுவென தோசையை தயார் செய்துக்கொள்ளுங்கள் .இதற்கு தேய்ங்காய் சட்னி அல்லது பூண்டு பொடி காம்போ அருமையாக இருக்கும்.