புதினா இலையில் பல்வேறு மருத்துவ ரீதியான குணங்கள் இருப்பதால், தினமும் புதினா டீ பருகினால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்க முடியும் என்கின்றனர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள்.


புதினாவை செடியில் பச்சைப்பசேல் என்று பார்க்கும் போது ஏற்படும்  புத்துணர்ச்சித்தான்,  அதனை உணவில் சேர்த்து உட்கொள்ளும் போது நமது உடலிலும் கட்டாயம் ஒரு ப்ரஷ்னஸ் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் புதினாவில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது போல, மருத்துவக்குணங்களும் அதிகளவில் உள்ளது. எனவே நமக்கான நாளை தொடங்குவதற்கு முன்னதாக தினமும் காலையில் புதினா டீ பருகினால் நிச்சயம் புது வித ப்ரஷ்னஸ் தான் நமக்குக் கிடைக்கும். குறிப்பாக மழைக்காலம் மற்றும் வெயில் காலம் என அனைத்துப் பருவநிலைக்கு ஏற்ற ஒரு அருமையான மூலிகை தான் புதினா. புதினா சாதம் எப்படி செய்வது என்று காணலாம்.


தேவையான பொருட்கள்


சாதம் - ஒரு கப்


புதினா கட்டு - 1


வெங்காயம் -இரண்டு


துருவிய தேங்காய் - ஒரு கப்


பச்சை மிளகாய் - 2 


தாளிக்க


கடுகு - ஒரு ஸ்பூன்


சீரகம் - ஒரு ஸ்பூன்


நிலக்கடலை / முந்திரி - ஒரு ஸ்பூன்


செய்முறை


புதினா, துருவிய தேங்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். மிதமான தீயில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடித்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் அதில் புதினா விழுதை சேர்த்து வதக்கவும். வதங்கும்போதே அதன் நிறம் மாறும். அப்போது சாதத்தை அதில் சேர்த்து கிளறி இறக்கிவிடவும். இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வறுத்த மீன், பீப் தவா கறி என உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம். புதினாவை அரைக்கும்போது மைய அரைத்துவிட வேண்டாம். கொஞ்சம் கசப்புத்தன்மை வந்துவிடும். 


இதே செய்முறையில் கொத்தமல்லி சாதமும் செய்து அசத்துங்க. 


தேவையான பொருட்கள்


 


வேகவைத்த உருளைக்கிழங்கு - 5 


புதினா இலைகள் நறுக்கியது - ஒரு கப் 


பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்


தக்காளி விழுது - ஒரு கப்


பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 3


இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்


தாளிக்க


சீரகம் - ஒரு ஸ்பூன்


கடுகு - ஒரு ஸ்பூன்


மஞ்சள் தூள் = ஒரு ஸ்பூன்


கரம் மசாலா - ஒரு ஸ்பூன்


கொத்தமல்லி தூள் - ஒரு ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


செய்முறை:


அடுப்பில் மிதமான தீயில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் எல்லாம் சேர்க்க வேண்டும்.


பின்னர், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன் நிறமாக மாறியதும் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும். இதோடு, கரம் மசாலா தேவையெனில் மிளகாய் தூள் கொஞ்சம் சேர்க்க வேண்டும்.


எல்லாம் நன்றாக வதங்கியதும் வேகவைத்த உருளை கிழங்கை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர், புதினா இலைகள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், ருசியான புதினா உருளைக்கிழங்கு மசாலா ரெடி.