சிக்கன் உணவுகள் பிடிக்கும் என்பவர்களாக இருந்தால் வீட்டிலேயே சிக்கன் பக்கோடா எப்படி செய்வது என்பது பற்றி இங்கே காணாலாம். 

சிக்கன் பக்கோடா:

என்னென்ன தேவை?

எலும்பு இல்லாத சிக்கன் - 250 கி

முட்டை - 2

சோள மாவு - 1/2 கப்

அரிசி மாவு - 1/2 கப்

கடலை மாவு - 1/2 கப்

எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு 

ஊற வைக்க:

மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் சேர்த்து அதோடு மிள்காய், சீரகம் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு கலந்து 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

 பின்னர் அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலக்க  வேண்டும். 

 ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சிக்கன் பக்கோடா ரெடி. 

இப்படி ஃப்ரெஷ்னா பக்கோடா வீட்டிலேயே மாலை நேரத்தில் டீ உடன் சாப்பிட செய்து விடலாம். மொறு மொறு என்று இருக்க சில டிப்ஸ்.

சிக்கன் துண்டுகள்:

புதிய கோழியாகவும் அதை சிறிய அளவிலான துண்டுகளாக நறுக்கினால் சுவை நன்றாக இருக்கும். எண்ணெயில் பொரிந்து சுவையாக இருக்கும்.

ஊற வைப்பது முக்கியம்:

சிக்கன் உடன் சேர்க்கும் மசாலா பொருட்கள், மஞ்சள், எலுமிச்சை, தயிர் என சேர்த்து அதில் சுவை ஏற வேண்டும். நன்றாக ஊற வைக்க வேண்டும். 

முட்டை சிக்கனோடு மசாலா சேர்வதற்கு உதவும். சோள மாவு கூடுதலான க்ரிஸ்பினஸ் தரும்.

இதோடு சிறிதளவு கஸ்தூரி மேத்தி செர்க்கலாம்.  எண்ணெயில் சிக்கன் பொரித்தெடுக்க 5-7 நிமிடங்களுள் எடுத்துவிடவும். பிறகு மீண்டும் எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும். மிதமான தீயில் வைத்து பொரிப்பது சுவையை அதிகரிக்கும்.

இதை மதிய உணவுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியுடன் சேர்த்து கொடுத்துவிடலாம். எளிதான செய்முறை தான். குழந்தைகளும் விரும்பு சாப்பிடுவர். உடலுக்கு தேவையான புரதச்சத்தும் கிடைக்கும். தக்காளி சாதன், எலுமிச்சை சாதம், சாம்பார், பிரியாணி என எந்த உணவாக இருந்தாலும் சிக்கன் பக்கோடா நல்லா காம்பினேசனாக இருக்கும். செய்து அசத்துங்க.