எந்த பருவ காலமாக இருந்தாலும் அந்த பருவத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வெயிட் லாஸ் உணவு செய்யலாம். அதற்கு ஒரு சான்றுதான் இந்த சிம்பிள் மேங்கோ டிரிங்க். ஆம் பானா என்று இந்தியில் சொல்கிறார்கள்.


இது ஒரு லோ கேலரி வெயிட் லாஸ் டிரிங். ஆம் பானா என்ற இந்த பானத்தை எப்போதும் வெயில் காலத்தில் தான் செய்வதுண்டு.


இந்த பானத்திற்கு மாம்பழம் முழுசாகவும் பழுத்திருக்கக் கூடாது ரொம்பவும் காயாக இருக்கக் கூடாது..


தேவையான பொருள் மற்றும் செய்முறை:


ஒரு டம்ளர் ஆம் பானா தயாரிக்க ஒரு மாங்காய் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை குக்கரில் போட்டு வேக வைக்கவும். அதிலிருந்து ஒரு ஸ்கூப் எடுத்து அதை ப்ளெண்டரில் கொஞ்சம் புதினா , ஐஸ் க்யூப் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை பின்னர் ஒரு மிக்ஸிப் பவுலில் ஊற்றி அதில் கொஞ்சம் சீரகத் தூள், வெல்லம், மாதுளை, மிளகுத் தூள், ப்ளாக் சால்ட் சேர்க்கவும். இப்போது இதனை ஒரு டம்ளரில் ஊற்றி பறிமாறவும்.