மண்பானை, இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்ற பாத்திரத்தில் நீங்கள் உணவு சமைக்கும்போது உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்க உதவியாக உள்ளது.
உணவு ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. அனைவரின் பசியைப் போக்கும் அதே வேளையில் ருசிக்கும் தனி முக்கியத்துவம் உள்ளது. அதற்கு மிகவும் முக்கியமானதாக அமைகிறது நாம் சமைக்கும் மற்றும சமைத்துப் பரிமாறப்படும் பாத்திரமும்தான். எவ்வளவு வேகமாக நாம் சமைத்து உண்கிறோமோ? அத்தனை அளவிற்கு அதில் சுவை மற்றும் ஆரோக்கியத்திலும் பிரபலிப்பதாக உள்ளது. மண்பானை, அலுமினியம், செம்பு ,இரும்பு , ஸ்டென்லஸ் ஸ்டீல், போன்ற பல வகையான பாத்திரங்கள் இருந்தாலும் இதில் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்கள் சமைப்பதற்குத் தகுதியானவையாக உள்ளது. எனவே இந்நேரத்தில், சமையலுக்கு பயனுள்ள பாத்திரங்கள் எவை? எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? அதில் என்ன பயன்கள் உள்ளது என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
மண்பானை:
நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மண்பானை சமையல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்றே கூறலாம். பொதுவாக சமைக்கும் பாத்திரமாக மட்டுமில்லாமல் உணவு சுவை மற்றும் ஆரோக்கியத்தையும் தரும் பொருளாகப் பாரக்கப்படுகிறது.
குறிப்பாக மண்பானையில் மெக்னசீயம், இரும்பு மற்றும் கால்சியம் அதிகளவில் உள்ளது. இதோடு உணவின் ஊட்டச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவியாக உள்ளது. மேலும் மண்பானையில் சமைக்கும்போது குறைவான அளவு எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இது உங்களுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவே அமைகிறது.
இதோடு சுற்றுச்சுழலுக்குப் பாதுகாப்பாகவும் அமைவதால் மண்பானை சமையல் இப்போதைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் தேவைப்படும் முக்கியமான ஒன்றாகிவிட்டது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்:
அடுத்தப்படியாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்.. இது உங்கள் உணவில் உள்ள பொருட்களை ருசிக்க அனுமதிக்கிறது. இதோடு பல உணவுகளுக்கு சுவையை வழங்குவதாகவும் உள்ளது. ஆனால் இதனை நீங்கள் இதனை சுகாதாரமாக பாதுகாக்க வேண்டும். இல்லாவிடில் தேவையற்ற உடல் நலப் பிரச்சனை உங்களுக்க நேரிடும். எனவே நல்ல தரமான ஸ்டீல் பயன்படுத்தும் வரை நமது ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தும் உங்களுக்கு ஏற்படாது.
மண்பானை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்திற்கு அடுத்தப்படியாக இரும்பு பாத்திரத்தில் சமைக்கலாம். நிச்சயம் இது பல்வேறு வகையாக உணவுகளை சமைக்க உதவியாக உள்ளது. பொதுவாக இரும்பின் கனத்தன்மைக் காரணமாக சமமாக வெப்பநிலையை நமக்கு வழங்குகிறது. இதன் காரணமாக நாம் சமைக்கும் உணவு சுவையை நமக்கு வழங்குவதாகவே அமைகிறது.
மேலும் இரும்பு மற்ற பாத்திரங்களை விட அதிக நேரம் வெப்பத்தைத் தக்க வைத்துக்கொள்ள உதவியாக உள்ளது. முக்கியமாக இரும்பு பாத்திரங்கள் நாம் சமைக்கும்போது இரும்புச்சத்து அதிகளவில் நம் உடலுக்கு கிடைக்க உதவுகிறது.