கால்சியம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி,ஈ, கே உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ள தாமரைத்தண்டை வாங்கும் போது இருபுறமும் மூடப்பட்டிருக்கிறதா? என்பதைப்பார்த்து தான் வாங்க வேண்டும்.
கொடி வகைகளைச்சேர்ந்த தாமரைத்தண்டில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின்கள் பல நிறைந்துள்ளன. மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையைக்குறைக்க விரும்புவோரும் தாமரைத்தண்டை அதிகளவில் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் மற்ற காய்கறிகளைப்போன்று இதனை வாங்குவதும், சுத்தம் செய்வதும் எளிதான காரியம் இல்லை. எனவே இந்நேரத்தில் பல்வேறு சத்துக்களும், உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த தாமரைத்தண்டை எப்படி உபயோகிப்பது என இங்கே தெரிந்துக்கொள்வோம்.
தாமரைத்தண்டை வாங்கும் போது நினைவில் வைத்துக்கொள்ளும் குறிப்புகள்:
தாமரைத்தண்டை வாங்கும் போது, அவை இருபுறமும் மூடப்பட்டிருக்கிறதா? என முதலில் கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே தண்டுகளுக்குள் சேறு இல்லாமல் இருக்கும். ஒரு வேளை ஒருபுறம் கூட திறந்திருந்தாலும், திறந்த துளைகள் வழியாக சேறு அதிகமாக இருக்கும்.
தாமரைத்தண்டு சுத்தம் செய்யும் முறை:
இருபுறமும் மூடியிருக்கும் தாமரைத்தண்டை வாங்கிய பின்னர், அதன் இரு முனைகளையும் நறுக்க வேண்டும். பின்னர் ஒரு பீலரைப்பயன்படுத்தி தண்டினை உரிக்க வேண்டும்.
அனைத்து நார்ச்சத்துள்ள தோல்களையும் உரித்த பின்னர், அதனை நன்றாக கழுவ வேண்டும். குறிப்பாக தண்டின் துளைகளுக்குள் தண்ணீர் அடிப்பதும் இதில் அடங்கும்.
இதனையடுத்து தாமரை தண்டை, சாய்வான கோணத்தில் வைத்து வெட்ட வேண்டும். ஏனென்றால் தாமரை தண்டு முடிகள் நிறைந்ததுள்ளதால் அதை நேராக வெட்டுவது கடினமாக இருக்கும். எனவே சமைப்பதற்கு ஏதுவாக தண்டை சிறியதாக’ அல்லது பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும்.
ஒருவேளை தாமரைத்தண்டில் அழுக்கு அதிகளவில் நிறைந்திருந்தால், முதலில் நீங்கள் ஒருஒரு டூத்பிக், அல்லது ஒரு காட்டன் பட்ஸைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அல்லது துண்டுகளை வெதுவெதுப்பான நீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.. இதனையடுத்து தாமரை தண்டு துண்டுகளை வெளியே எடுத்து உங்களது விருப்பப்படி நீங்கள் சமைக்கலாம்.
குறிப்பாக தாமரைத்தண்டு மற்ற தாவரங்களை விட அதிக சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி சத்து மிக அதிகமாக இருப்பதால் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் நமது மிருதுவான சருமத்துக்கும் முடி வளர்ச்சிக்கும் உதவியாக இருப்பதோடு எலும்புக் குறைபாடுகளைச் சரிசெய்யவும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும் தாமரைத்தண்டு மிகுந்த பயனுள்ள உதவுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே உடலுக்கு ஆரோக்கியம் தாமரைத்தண்டை மேற்கண்ட முறைகளில் வாங்கிப் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.