பண்டிகை காலங்களில் வீடுகளில் இனிப்பு பலகாரங்கள் முதல்  கார வகைகள் என அன்றைய சமையலையும் சுவைத்து உண்ணும் விதமாகவே  செய்து அசத்துவார்கள். இந்த திருவிழா காலங்களில் நமது வீடுகளுக்கு வரும் விருந்தினர்களை உபசரிக்கும் விதமாக சைவ உணவுகள், அசைவ உணவுகள் என பல்வேறு வகையான உணவுகளை வீடுகளில் வாய்க்கு ருசியாக சமைத்து விருந்தினர்களுக்கு வழங்குவார்கள்.


ரோஸ்ட் சிக்கன்:


ஆகவே பண்டிகை காலங்களில் உங்களது சமையலில் முக்கியமாக அசைவ உணவு செய்ய விரும்பினால், இந்த ரோஸ்ட் சிக்கன் செய்து நீங்கள் விருந்தினர்களை உபசரிக்கலாம். விருந்தினர்களும் இரண்டாவது முறையாக விரும்பி வாங்கி உண்ணும் அளவிற்கு மிகவும் சுவையாக இருக்கும்.


இந்த கரம் மசாலா , மற்றும் புளி கரைசல் உள்ளிட்ட ஏனைய மசாலாக்களை பேஸ்ட் செய்து வறுத்த இந்த முழு கோழியானது அசைவ உணவை விரும்புவோருக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். ஒரு முழு கோழியை வறுப்பதற்கு முன் அதன் மீது மிளகாய் தூள் உள்ளிட்ட சுவையூட்டிகளை நாம் போட்டு அலங்கரிக்கும் போது அது ஒரு அழகான உருவமாக நமக்கு தென்படும்.


நறுமண சுவை:


கோழியின் மேல் பகுதியில் மசாலாவை தடவினாலும் முழு கோழியின் உட்புறமாக மசாலா நன்கு ஊறி பிடிக்கும் வகையில்  அங்கும் வைக்க வேண்டும்.  முழு கோழியை ரோஸ்ட் செய்வதற்கு தேவையான மசாலா பொருட்களை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அரைத்து வரும்போது நறுமணம் மிக்க ஒரு மசாலா கலவை உருவாகும். இவற்றை அந்த கோழியின் மீது பூசும்போது கோழி மீது இருக்கும் இயற்கையான வாசனை சென்று நறுமணமிக்க சமையலின் வாசனையை அது தோற்றுவிக்கும்.


கரம் மசாலா, சீரகம், வாசனை இலை, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, காய்ந்த மிளகாய் மற்றும் கருப்பு மிளகு, இஞ்சி பூண்டு பேஸ்ட் உள்ளிட்ட    இந்திய மசாலா கலவையை இந்த ரோஸ்ட் சிக்கன் செய்ய பயன்படுத்தலாம். மற்றும்  இதில் சேர்க்கப்படும் புளி கலவையானது இனிப்பும் புளிப்பும் சேர்ந்தது போன்ற ஒரு சுவையை தோற்றுவிக்கும்.


அசத்தல் சுவை:


இந்த குறித்த மசாலாக்களை ஒன்றாக கோழியின் உட்புறமாகவும் மேற்புறமாகவும் பூசி நன்கு ஊற விட வேண்டும். அதேபோல் இந்த மசாலாக்களுடன் வெண்ணெய் சேர்த்துக் நன்கு கலந்து கோழியின் மேற்புறமாக தடவ வேண்டும்.
 
கோழியை சூட்டில் வைத்து வறுக்கும்போது அதன் மேல் பூசப்பட்டிருக்கும் மசாலா கலவையானது அதன் தோலில் உள்ள கொழுப்புடன் கலக்கிறது. இவ்வாறு நாம் கோழியின் உள்ளே வைத்த நிறைந்த  மசாலாவும், கோழியில் இயற்கையாக உள்ள கொழுப்பும் சேர்ந்து ரோஸ்ட் சிக்கனுக்கு மிகவும் சுவையூட்டுகிறது. இந்த ரோஸ்ட் சிக்கனை ரொட்டி. சப்பாத்தி , பரோட்டா போன்றவற்றுடன் பரிமாறலாம். கரம் மசாலா மற்றும் புளி கலவை சுவை நிறைந்த , இந்த வறுத்த கோழியை சமையல் செய்து எடுக்க சுமார் இரண்டு மணி நேரமாகலாம் என கூறப்படுகிறது.



தேவையான பொருட்கள்:-



4 தேக்கரண்டிஉப்பு


 போதுமான அளவு வெண்ணெய்


1 தேக்கரண்டி கரம் மசாலா


1 தேக்கரண்டி புளி கரைத்தது.


½ தேக்கரண்டி தூள் செய்யப்பட்ட இலவங்கப்பட்டை


தூள் செய்யப்பட்ட கருப்பு மிளகு


இஞ்சி பூண்டு பேஸ்ட்


 முழு கோழி



முறை:-


ஓவனை முதலில் 425°Fக்கு நன்கு சூடாக்க விடவும். அதன் உள்ளே உள்ள கம்பிகள் நன்கு ஆரஞ்சு நிறத்தில் சூடாக வேண்டும்.


வெண்ணெய், புளி கரைசல், கரம் மசாலா, இலவங்கப்பட்டை, 1 தேக்கரண்டி உப்பு மற்றும் ½ தேக்கரண்டி மிளகு , இஞ்சி பூண்டு கலவை ஆகியவற்றை நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.


 பின்னர் அந்தக் கலவையை கோழியின் மேல் பகுதி முழுவதும் மற்றும் உள்பகுதியிலும் கைகளால் நன்கு பூசவும்.  கோழியின் இரண்டு தொடை பகுதி மற்றும் இறக்கை பகுதியை இலகுவாக தளர்த்த வேண்டும். பின்னர் இறக்கைகளையும் , கால்களையும் கட்ட வேண்டும்.


பின்னர் கோழியின் மார்பு பகுதி நன்கு சூடாகும் வகையில் ஓவனில் வைத்து 175°F, 60 முதல் 80 நிமிடங்கள் வரை வறுக்கவும்.


பின்னர் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு வைக்க வேண்டும். வெண்ணை, மசாலா கலவை நன்கு கலந்து ஒரு நறுமணம் மிக்க ரோஸ்ட் சிக்கன் சமையல் செய்யப்பட்டிருக்கும்