கேக்கில் ஏராளமான வகைகள் இருந்தாலும் இந்த கேரட் கேக் கொஞ்சம் ஸ்பெஷல் தான். மைக்ரோவேவ் அவனில் இந்த கேக்கை மிக ஈசியாக செய்து விட முடியும். இந்த கேக்கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவர். வாங்க இந்த கேரட் கேக்கை எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்



  • 3 முட்டைகள்

  • 1/2 கப் தயிர் 

  • 1/2 கப் மேப்பிள் சிரப்

  • 1/2 கப் பால்

  • 1 டீஸ்பூன் வெண்ணிலா சாறு

  • 2 கேரட், நறுக்கியது

  • 1 ½ கப் கோதுமை மாவு

  • 1 ¾ தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

  • 1 ½ தேக்கரண்டி இலவங்கப்பட்டை

  • 8 அவுன்ஸ் லைட் கிரீம் சீஸ் (225 கிராம்), மென்மையாக்கப்பட்டது

  • 1/2 கப் மேப்பிள் சிரப்

  • 1 தேக்கரண்டி வெண்ணிலா extract


செய்முறை


1. முதலில் மைக்ரோவேவ் அவனை 350°F (175°C)க்கு சூடாக்க வேண்டும்.

 

2.முட்டைகளை ஒரு பெரிய கிண்ணத்தில் நன்கு நுரை வரும் வரை அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

3.பின்னர் தயிர் சேர்த்து மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

 

4.பால், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் மேப்பிள் சிரப் சேர்த்து,  மீண்டும் ஒருமுறை, கலவையை நன்றாக அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

5.இந்த கலவையின் மீது, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் இலவங்கப்பட்டை பொடி தூவி,  இவை கலக்கும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

 

6.ஒரு மீடியம் சைஸ் ஐஸ்கிரீம் ஸ்கூப்பைப் பயன்படுத்தி 12-கப் மஃபின் ட்ரேயில் வெண்ணெய் தடவி மாவை இதில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

 

7.மஃபின்களை ஓவனில்  20 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அல்லது அவை உப்பி வரும் வரை வேக வைக்க வேண்டும்.

 

8.கேக் மீது  பூசுவதவதற்கான கிரீம் சீஸ்-ஐ ஒரு கிண்ணத்தில் சேர்த்து மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். 

 

9. மேப்பிள் சிரப்( maple syrup)  மற்றும் வெண்ணிலா extract  சேர்த்து கலவையை மீண்டும் ஒரு முறை நன்றாக கலக்க வேண்டும்.

 

10. ஒரு சிறிய ஐஸ்கிரீம் ஸ்கூப்பைப் பயன்படுத்தி மஃபின்கள் குளிர்ந்தவுடன் அதன் மேல் சிறிது கிரீமை பரப்பவும். அவ்வளவு தான் சுவையான கேரட் கேக் தயார்.