குளிர்காலம் என்பது இயற்கையிலேயே பல சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் விளையும் பருவமாகும். இந்தப் பருவத்தில் மிகவும் பொதுவாக விளையும் பழங்களில் ஒன்று வாட்டர் செஸ்ட்நட் எனப்படும் கஷ் கொட்டை.
இந்த செஸ்ட் நட்டை பொதுவாக பழம் மற்றும் கொட்டைகள் இரண்டிலும் வகைப்படுத்துவர். இவை எவ்வளவு ருசியாக இருக்கின்றனவோ அதே அளவு நன்மைகளையும் கொண்டது. குறிப்பாக ஆண்களுக்கு இது மிகவும் பயனுள்ளது.
இது வெறும் பழமாக மட்டும் உண்ணப்படுவதில்லை. டயட்டில் இருக்கும் மக்கள் பெரும்பாலும் இந்த கஷ்கொட்டை மாவில் செய்யப்பட்ட ரொட்டிகளை சாப்பிடுகிறார்கள்.
கஷ்கொட்டையில் கொழுப்பு அறவே இல்லை. இதில் 4 கிராம் நார்ச்சத்து, 23.9 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் புரதம் உள்ளது.
பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் பி6, ரிபோஃப்ளேவின், தாமிரம் ஆகிய சத்துகளும் உள்ளன.
செஸ்ட்நட்டின் பலன்கள்
- கஷ்கொட்டை ஒரு குறைந்த கலோரி பழம், எனவே, இது எடை குறைப்பில் நல்ல பலன் அளிக்கிறது. இதன் ஊட்டச்சத்து மதிப்பும் மிக அதிகம்.
- இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
- உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
- கஷ் கொட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.
- இதில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
- கஷ்கொட்டை உடலில் கட்டிகள் வளர்வதையும் உருவாவதையும் தடுக்கிறது.
கணுக்காலில் வெடிப்பு இருந்தால், இந்தப் பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள், நிவாரணம் அளிக்கும். - தைராய்டு உள்ளவர்களுக்கு மிகவும் பயனளிக்கும். இதில் நல்ல அளவு அயோடின் இருப்பதால் நிவாரணம் தருகிறது.
- வீக்கத்திலும் மிகவும் நன்மை பயக்கும். இறந்த செல்களை சரிசெய்து வீக்கத்தைக் குறைக்கும்.
- டையோஸ்மெடின், லுடோலின், ஃபிசெடின் மற்றும் டெக்டோரிஜினின் உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளன.