வார இறுதி வருகிறது...நண்பர்களுடன் வெளியே எங்கே செல்லலாம் எனப் பல பட்டியலிட்டு கடைசியில் வீட்டிலேயே கொட்டமடிக்கத் திட்டமிடுவோம். வீட்டில் நண்பர்கள் ஒன்றாக இருக்கும்போது சமைத்துச் சாப்பிட பிரியாணியை விட சிறந்த ரெசிபி வேறு என்ன இருந்துவிடப் போகிறது.. அதுவும் ஹரியாலி சிக்கன் பிரியாணி எப்படிச் செய்வது என்பதைப் பார்ப்போம்...


ஹரியாலி சிக்கன் பிரியாணி என்பது கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள் மற்றும் பச்சை மிளகாய் போன்ற புளிப்பும் காரமுமான பொருட்களின் கலவையில் ஹரியாலி சிக்கன் மாரினேட் செய்து தயாரிப்பது...







1. முதலில் பச்சை பேஸ்டுக்கு: சீரகம், மிளகு சோளம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு, கழுவி இலைகள் தனியே ஆயப்பட்ட கீரை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், எலுமிச்சை சாறு போன்ற அனைத்து பொருட்களையும் ஒரு மென்மையான பேஸ்டாக உருவாகும் வரை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைக்கும்போது சிறிது அளவு தண்ணீரைச் சேர்க்கவும்  


2. மேரினேஷனுக்கு கோழி துண்டுகளை உப்பு, பிரியாணி மசாலா, மிளகாய் தூள் மற்றும் வறுத்த வெங்காயத்துடன் கலவையாகச் செய்து ஊற வையுங்கள் கூடுதலாகப் பச்சை பேஸ்டில் பாதியைச் சேர்த்து, குறைந்தபட்சம் 2 மணிநேரம் மேரினேட் செய்யுங்கள் .


3. ஒரு கனமான பாத்திரத்தில், நெய் மற்றும் கோழி துண்டுகளைச் சேர்க்கவும். கோழி பழுப்பு நிறமாக மாறும் வரை கோழியை சமைக்கவும். பிறகு எஞ்சிய பச்சை பேஸ்ட்டில் மசாலா பொடி சேர்த்து 10-12 நிமிடங்களுக்கு சமைக்கவும். 4. எரிந்த கரித்துண்டை ஒரு ஃபாயிலில் சுற்றி சமைத்த கோழிக்கு நடுவே வைத்து ஃபாயிலின் மீது நெய் ஊற்றவும். இது கிரேவிக்கு புகைப்பான சுவையைத் தரும் 5. பிறகு தயிர் சேர்த்து அதை கலந்து அடுப்பை அணைக்கவும். 6. மற்றொரு பாத்திரத்தில் ஸ்பைஸ்கள்,பச்சைமிளகாய்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.



7. அரிசியைப் பாத்திரத்தில் உலைவைத்து 70 சதவிகிதம் வரை பொலபொலவென இருக்கும் பதத்தில் சமைக்கவும். 8.அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி, கோழி கிரேவி மீது அரிசியை ஊற்றவும். 9. இதை சுமார் அரை மணி நேரம் வெதுவெதுப்பான பதத்தில் இருக்க விடவும். ஹரியாலி சிக்கன் பிரியாணி தயார்.