பசி வந்தால் இப்படித்தான் ஆகிவிடும் என்ற சாக்லேட் விளம்பரம் போல் நம்மில் பலருக்கும் வரும் சிறு பசி பாடாய்ப்படுத்திவிடும். அப்போது நமக்கு பெரும்பாலும் தோன்றுவது பாக்கெட் உணவுகள் தான். ஆனால் அப்படி அன் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் பக்கம் போகாமல் வீட்டிலேயே வாழைப்பழம் கொண்டு சிம்பிளா சில ரெஸிபிக்களை செய்யலாம். சாப்பிடலாம்.


பனானா டோஸ்ட்:


தேவையான பொருட்கள்:


வாழைப்பழம் 1
தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
கொஞ்சம் பட்டை தூள்
இனிப்பேற்றப்படாத நட் பட்டர்
வறுத்த வேர்க்கடலை கொஞ்சம்


செய்முறை:


ஒரு வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதில் இயற்கையாகவே இருக்கும் சர்க்கரையால் வாழைப்பழம் கேரமலைஸ் ஆகிவிடும். பின்னர் அதில் இருபுறமும் சினமன் தூளை தூவிவிடவும்.
 இப்போது உங்களுக்குப் பிடித்தமான பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளவும். அதில் அன்ஸ்வீட்டண்ட் பட்டர் சேர்க்கவும். பின்னர் அதன் மீது வாழைப்பழ துண்டுகளை வைக்கவும். பறிமாறவும். பசியாறவும்.


கீரை பனானா ஸ்மூத்தி


தேவையான பொருட்கள்:


பழுத்த வாழைப்பழங்கள் 2
2 கப் அரை கீரை
1 கப் அன்ஸ்வீட்டண்ட் பாதாம் பால்
1 டேபிள்ஸ்பூன் தேன்
1 டீஸ்பூன் வெனிலா எக்ஸ்ட்ராக்ட்
ஐஸ் க்யூப்ஸ் ( தேவைப்பட்டால்)


செய்முறை:
வாழைப்பழம், கீரை, பாதாம் பால், தேன், வெனிலா எக்ஸ்ட்ராக்ட் எல்லாவற்றையும் நன்றாக ப்ளண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். க்ரீம் பதத்திற்கு வந்தபின்னர் எடுத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.


பனானா எக் பேன் கேக்ஸ் 


தேவையான பொருட்கள்: 


பழுத்த வாழைப்பழம் 1
2 முட்டை
எண்ணெய்


செய்முறை:
வாழைப்பழ தோலை உரித்து அதை நன்றாக மசித்துக் கொள்ளவும். பின்னர் இரண்டு முட்டைகளை ஒரு பவுலில் உடைத்து ஊற்றி அதில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு நன்றாக விஸ்க் செய்து கொள்ளவும்.
 ஒரு நான் ஸ்டிக் பேனை சூடாக்கி தீயை மிதமாக வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் தேய்க்கவும். கால் கப் அளவு மாவை எடுத்து பேனில் ஊற்றவும்.


பொன்னிறமாக மாறும் வரை 2 முதல் 3 நிமிடங்கள் வேக வைக்கவும். பனானா பேன் கேக் தயார்.
ப்ரோட்டீன் ப்ளூபெர்ரி பனானா ஸ்மூத்தி


தேவையான பொருட்கள்


1 கப் ப்ரோஸன் ப்ளூபெர்ரீஸ்
1 பழுத்த வாழைப்பழம்
1 ஸ்கூப் வெனிலா புரத பவுடர்
1 டேபிள்ஸ்பூன் ஆல்மண்ட் பட்டர்
அரை டீஸ்பூன் வெனிலா எக்ஸ்ட்ராக்ட்


செய்முறை:


ஒரு ப்ளெண்டரில் எல்லா பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து க்ரீம் பதத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் கொஞ்சம் பாதாம் பால் சேர்க்கவும். அது கெட்டியாகும் வரை பாதாம் பால் சேர்க்கவும். ஒரு க்ளாஸில் ஊற்றி பறிமாறவும்.


இந்த 4 ரெஸிபிக்களும் செய்வது எளிது ஊட்டச்சத்து நிறைந்தது.