Healthy Snacking For Pregancy:


கர்ப்ப காலத்தில் குழந்தைக்கும் சேர்த்தும் தாய் சாப்பிட வேண்டும் என்று சொல்வது உண்டு. அப்படியிருக்க, வயிற்றில் வளரும் குட்டி உயிரின் ஆரோக்கியத்தினை முன்னிருத்தியே தாய்மார்களின் டயட் இருக்கும். இருந்தாலும், சில ஸ்நாக்ஸ் cravings-ஐ விட முடியாதே. என்ன செய்யறதுன்னு யோசிக்கிறீங்களா? உங்களுக்கான ஆரோக்கியமான ஸ்நாக்கிங் டிப்ஸ் இதோ!




முதல் அசைவு:


குழந்தையின் முதல் அசைவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சுகமே தனிதான். எந்த நொடி அந்த அற்புதம் நிகழுமோ என எண்ணியபடி என்ன வேலை செய்தாலும் மனம் முழுக்க வயிற்றிலேயே ஒன்றியிருக்கும் நாட்களவை. குட்டிஉயிரின் முதல் அசைவை முதலில் தாய் மட்டுமே உணரமுடியும் என்பது சற்று வருத்தமே. நாம் மட்டும் கொண்டாடும் அந்தத் தருணத்தை நம் முகக்குறிப்பை உணரமுடியாமல் குழந்தையின் தந்தைபடும் அவஸ்தையும் அழகே.


காற்றுக் குமிழிகள்போல் வயிற்றுக்குள் லேசாக ஒரு உணர்வு தோன்றும். பசியால் வயிற்றுக்குள்ளிருந்து கர்ர்ர்ர் என்று சிலநேரம் கேட்குமே அதைவிடவும் மெல்லிய அசைவாக இருந்தது. நான் உணர்ந்தது கனவா கற்பனையா நிஜமா என்று நிதானிப்பதற்குள் அடுத்தடுத்து மீண்டும் இரண்டுமுறை அதேபோன்ற அசைவு. துள்ளிக்குதிக்க வேண்டும்போல இருந்ததாகவும், வாலையெல்லாம் சுருட்டி வைத்திருக்க வேண்டியுள்ளதால் கொஞ்சமாக குதூகலித்துக் கொண்டதாக கருவுற்றவர்கள் பேசக் கேட்டிருப்போம்.


அப்படியே கர்ப்ப காலத்தில் அடிக்கடி எழும் பசி உணர்வுக்கும் ஆரோக்கியமான முறையில் தீனி போடலாம் வாங்க. 


அவல்:


 அவல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அடிக்கடி சாப்பிடலாம். ஊற வைத்த கெட்டி அவல், தேங்காய் அதோடு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். காரமாக சாப்பிட வேண்டுமென நினைத்தால், போஹா உப்புமா செய்யலாம். அதான் அவல் உப்புமா. கேரட், தக்காளி, வெங்காயம், பீன்ஸ் அல்லது வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றை ஆரோக்கியமான சிற்றுண்டியாக மாற்றலாம். சுவைக்காகவும், வைட்டமின் சியின் நற்குணத்தைக் கொண்டிருப்பதாலும், இதோடு சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கலாம்.எதாவது ஸ்பைசியாக சாப்பிடனும்னா இது சிறந்த சாய்ஸ்.




வீட் பிரெட் சாண்ட்விச்:


 பசி வேதனையை நீங்கள் உணரும் போதெல்லாம் சாண்ட்விச்கள் எப்போதும் கண் முன் வந்து செல்லும். இல்லையா?  தக்காளி, கீரை மற்றும் ஒரு துண்டு சீஸ் ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது கெட்ச்அப் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து, சுவையான ஸ்நாக் ஆக இருக்கும். கூடுதல் சுவைக்காக உங்கள் சாண்ட்விச்சில் சிறிது வேகவைத்த கோழியையும் சேர்க்கலாம்.


முட்டை:


பசி உணர்வை சரிசெய்யவும் அதே வேளையில் சுவைமிக்க உணவாக முட்டை இருக்கும். கர்ப்ப காலத்தில் வேகவைத்த முட்டைகள் நாளின் எந்த நேரத்திலும் எடுத்து கொள்ளலாம். அத்துடன் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் தரும். முட்டை புரதத்தின் சிறந்த ஆதாரமாக இருப்பதைத் தவிர, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.




மஞ்சள் கருவில் நிறைய சத்துக்கள்.  உங்களுக்கு வேகவைத்த முட்டைகள் பிடிக்கவில்லை என்றால், 'scrambled Egg' அல்லது குறைந்த அளவில் எண்ணெய் சேர்த்து ஆம்லட் சாப்பிடலாம்.




உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்:


சாப்பிடுவதற்கு  மொறுமொறுப்பான ஒன்றைத் தேடுகிறீர்களானால், நட்ஸ் சரியான தேர்வாகும். பாதாம், முந்திரி, பிஸ்தா அல்லது வால்நட் போன்ற பல்வேறு நட்ஸ் ஸ்நாக்கிங்கிற்கு சிறந்த சாய்ஸ்.  புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் நட்ஸ்களில் ஏராளமாக உள்ளன. கர்ப்ப காலத்தில் நட்ஸ் எடுத்துகொள்வது அவசியமானதும் கூட. ஏனெனில், தாய்க்கும் சேய்க்கும் நன்மைபயக்கும். மேலும், நட்ஸ்கள்,  குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் தாதுக்களைக் கொண்டுள்ளன.




யோர்கர்ட் ஸ்மூத்தி:


எதாவது எனர்ஜிட்டாக வேண்டும், புத்துணர்ச்சியான டிரிங் வேண்டும் என்றால் யோர்கர்ட் ஸ்மூத்தி டிரை செய்யலாம்.  இவை தயாரிப்பது மிகவும் எளிதானது. யோகர்ட் ஸ்மூத்திகளும் மிகவும் சத்தானவை. ஏனெனில் இதில் குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் அதிகம் உள்ளது. கூடுதலாக, இது புரதத்தின் ஆதாரமாகும்.  இது குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கிறது.


அதனால், இனி எதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் கவலை வேண்டாம். ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்டு மகிழுங்கள். செல்ல குட்டியும் ஹேப்பியாக இருக்கும்.