ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி என்பது இன்றைய காலத்தில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாகும். கர்ப்பம், மன அழுத்தம், உடல் பருமன் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படக்கூடும் என்றாலும், அசாதாரண மாதவிடாய் சுழற்சிகளை அனுபவிப்பது மிகவும் கவலைக்குரியதாக இருக்கும். தனுராசனம், புஜங்காசனம், மலாசனம் மற்றும் பத்தகோனாசனம் உள்ளிட்ட யோகாசனங்களைப் பயிற்சி செய்வது உடல்நிலையைச் சீராக்கும். இது ஹார்மோன்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சிகளை சீராக்க உதவும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு மிக முக்கியக் காரணம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்.இது 5 பெண்களில் ஒருவரை பாதிக்கும் பொதுவான நாளமில்லா நோய்களில் ஒன்றாகும். இது நாள்பட்ட அழற்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகப்படியான உடல் முடி மற்றும் அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்ற ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவற்றால் அறியப்படுகிறது.
பிசிஓஎஸ் நிர்வாகத்தில் உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பங்குவகிக்கும் அதே வேளையில், உங்கள் உணவில் இருந்து சரியான ஹார்மோன்-சமநிலைப்படுத்தும் ஊட்டச்சத்துக்களை நீங்கள் பெறுவதை உறுதி செய்வதே ஒரு வழி.
துத்தநாகம்: பிசிஓஎஸ் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு துத்தநாகம் பொதுவாக கவனத்தில் இருக்காது ஆனால் உடலில் போதுமான அளவு அது இருக்க வேண்டும். பிசிஓஎஸ் உள்ள பெண்களில் துத்தநாகம் கருவுறுதலை மேம்படுத்துகிறது மற்றும் முகப்பரு, ஹிர்சுட்டிசம் மற்றும் முடி உதிர்தல் உள்ளிட்ட உயர் டெஸ்டோஸ்டிரோனின் விளைவுகளை குறைக்கிறது.
மெக்னீசியம் - சர்க்கரை வளர்சிதை மாற்றத்தை எளிதாக்கும், பொட்டாசியம், கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் சரியான போக்குவரத்துக்கு உதவுகிறது, வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது, பதட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் மெக்னீசியம் இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
வைட்டமின் டி - இனப்பெருக்க ஹார்மோன் ஒழுங்குமுறையில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் முல்லேரியன் எதிர்ப்பு ஹார்மோன் (AMH), ஃபாலிக்கல் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH) மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவை இது பாதிக்கிறது. இரத்த சர்க்கரை சமநிலை மற்றும் இன்சுலின் ஒழுங்குமுறைக்கு இது அவசியம்
வைட்டமின் பி12 - வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் பி9, இரண்டு பி வைட்டமின்களும் ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலத்தை உடைத்து வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.