Travel: குழந்தைகளுடன் ரயிலில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பயணிக்க சில யோசனைகள்!

ரயில் வந்து நிற்கும் தண்டவாள நடைமேடையில்,குழந்தைகளுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை சொல்லிக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Continues below advertisement

ரயில் பயணம் என்பது நூற்றில், 80 சதவீதம் பேர் விரும்பும், ஒரு சொகுசான பயணமாகும். அலுங்கள் குலுங்கள் இல்லாமல், உடம்பு வலி தெரியாமல், சிறப்பான பயணத்தை மேற்கொள்வதில், ரயில் பயணம் முதல் இடத்தில் இருக்கிறது.

Continues below advertisement

அதேநேரம், இதில் சற்று சிரமமான விஷயங்களும் இருக்கிறது. பதிவு செய்யப்படாத பயணப் பெட்டியில் பயணிப்பது என்பது, உங்கள் ரயில் பயண சந்தோஷத்தை, முற்றிலும், உங்களிடம் இருந்து பறித்துவிடும். மேலும், நேரத்திற்கு செல்ல வேண்டிய மற்றொரு கட்டாயமும் ரயில் பயணத்தில் இருக்கிறது. இது மட்டுமல்லாமல், ரயில் வந்து நிற்கும் தண்டவாள நடைமேடையில்,குழந்தைகளுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

உணவு மற்றும் குடிநீரை கொண்டு செல்லுங்கள்:

குடும்பத்தோடு ரயிலில் பயணிப்பது என்று வந்துவிட்டால், உங்கள் பயணத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றை நீங்கள் வீட்டிலிருந்தே, தயாரித்து எடுத்துச் செல்வது, உங்கள் உடலுக்கும் உங்கள் பணத்திற்கும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும், அதிலும் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது,அவர்களுக்கு கண்ட எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸ்கள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும்,செயற்கை நிறமிகள் அடங்கிய,உணவுப் பொருட்களை வாங்கி கொடுப்பதில் இருந்து தவிர்த்து,வீட்டிலிருந்து கொண்டு சென்று சாப்பிடும், நல்ல பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்த முடியும்.

குழந்தைகளுக்கு ரயிலின் பயண நேரத்தையும், அங்கு நடந்து கொள்ளும் முறைகளையும் சொல்லிக் கொடுங்கள்.வீட்டில் குழந்தைகளுக்கு, சொந்த ஊருக்கு ரயிலில் செல்கிறோம் என்று தெரியப்படுத்துவதோடு மட்டும் இல்லாமல், பயண தேதி, பயண நேரம், எந்த ரயில்வே நிலையம் என அனைத்தையும் அவர்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்து, ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, அவர்களை தயார் படுத்துங்கள். மேலும் நடைமேடையில் வரையப்பட்டிருக்கும் பாதுகாப்பு கோடுகளுக்கு முன்பாக மட்டுமே,எப்பொழுதும் இருக்க வேண்டும்,என்பதைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். அதைப் போலவே நடைமேடையில், எச்சில் துப்பாமல் இருப்பது மற்றும் சிறுநீர் கழிக்க, அங்கே இருக்கும் கழிவறைகளை பயன்படுத்துவது  என அவர்களுக்கு நடைமுறையில் ஒரு நல்ல அனுபவத்தை முன்கூட்டியே சொல்லிக் கொடுங்கள்.

ரயிலில் ஏறிய பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

குழந்தைகளுக்கு நீங்கள் அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்,ரயில் நின்ற பிறகு சீட்டை விட்டு எழுந்து, தேவைக்கு பிளாட்பாரத்தில் இறங்க வேண்டும் என்பது,மிக முக்கியமாக நீங்கள் சொல்லித் தர வேண்டியதாகும். ஏனெனில் ரயில் பெட்டிகளில்  கதவுகள் திறந்திருக்கும்.ஆகவே எப்பொழுதும் ரயில் நின்ற பிறகு, அவர்கள் சீட்டை விட்டு எழுந்திருக்குமாறு அறிவுறுத்துங்கள்.

சிறுநீர் கழிக்க அல்லது கை கால் முகம் கழுவிக்கொள்ள என அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில், கண்டிப்பாக,பெரியவர்கள் யாரேனும் ஒருவரை, துணைக்கு அழைத்துக் கொண்டு மட்டுமே, பாத்ரூம் செல்ல வேண்டும் என்பதையும் மிக தெளிவாக அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். அதைப்போலவே,ஜன்னல் ஓர இருக்கைகள் என்றால்,ஜன்னல்களை மேலே தூக்கி,பிறகு அதில் இருக்கும் சேப்டி லாக்குகளை போட்டு, ஜன்னல்கள் கீழே விழாதவாறு இருக்கும்படி, அவர்களுக்கு நேரடியாக செய்து காண்பியுங்கள்.

இதே போல பயணம் முடிந்ததும், அவர்கள் பார்த்த விஷயங்கள்,பார்த்த ஊர்கள்,ரசித்த இயற்கை காட்சிகள் மற்றும் சந்தித்த மனிதர்கள் என அவர்களிடம் கதையாகவும், கட்டுரையாகவும் மற்றும் படங்களாகவும் வரைந்து காட்டும்படி, சொல்லுங்கள்.அடுத்த முறை அவர்கள் பிரயாணம் செய்யும் போது, அவர்களுடைய கற்பனையையும், நடைமுறை வாழ்க்கையின் புரிதலையும் அவர்களுக்கு அதிகம் ஏற்படுத்தும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola