தேவையான பொருட்கள் 


முட்டை - 3


வெங்காயம் -3 


கோதுமை மாவு இரண்டு ஸ்பூன்


உப்பு தேவையான அளவு


எள் -அரை டீஸ்பூன்


மஞ்சள் தூள் 


கால் டீஸ்பூன் 


மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப


எண்ணெய் - தேவையான அளவு 


செய்முறை 


முதலிம் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். இதை சிறிது எண்ணெயில் வதக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 


வெங்காயம் சிறிது ஆறியதும் முட்டைகளை அதே கிண்ணத்தின் உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். கோதுமை மாவு, மஞ்சள் தூள் மிளகாய் தூள், உப்பு நறுக்கிய கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். 


இப்போது ஒரு தோசைக் கல் அல்லது நான் ஸ்டிக் பேன் -ஐ அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் இந்த முட்டை கலவையை ஊற்ற வேண்டும். பின் இதன் மீது எள் தூவி விட வேண்டும். இதை திருப்பி விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


அவ்வளவுதான் சில நிமிடங்களில் ஈசியான காலை உணவு தயாராகி விட்டது. இது நல்ல சுவையாக இருப்பதுடன் வயிறு நிரம்பிய திருப்தியான உணர்வையும் தரும். 


முட்டை பிரெட் டோஸ்ட்


ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய 2 பூண்டு பற்களை சேர்த்து வதக்கி விட்டு, பின் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட வேண்டும். இதனுடன் துருவிய  1 கேரட், துருவிய 1 உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய ஒரு குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட்டு. இரண்டு நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.  இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் முக்கால் ஸ்பூன் சிக்கன் மசாலா சேர்த்து கிளறி விட்டு, தக்காளி கெட்சப் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். 


மூன்று முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், காய்ந்த மிளகாய் பொடி இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 


பின் பிரட் துண்டின் ஓரங்களை அகற்றி விட்டும் சில பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பிரட் துண்டின் மேல் தயாரித்து வைத்துள்ள ஸ்டஃபை வைத்து அதை சற்று பரப்பி விட்டு அதன் மீது மற்றொறு பிரட் துண்வை வைத்து மூடிக்கொள்ள வேண்டும். 


ஒரு பேனில் எண்ணெய் அல்லது சீஸ் சேர்த்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள பிரெட்டை முட்டையில் முக்கி எடுத்து பேனில் சேர்த்து இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான காலை உணவு தயார்.