ப்ரோக்கோலி - கேரட் சூப்
என்னென்ன தேவை?
வெங்காயம் - 2
ப்ரோக்கோலி - 100கி
கேரட் - 50 கி
மைதா மாவு - 2 டீ ஸ்பூன்
பூண்டு பொடி - 1/4 டீஸ்பூம்
வெஜ்டபிள் ஸ்டாக் - ஒரு கப்
பால் - 200 மி.லி.
சீஸ் ஸ்லைஸ் - 3
வெண்ணெய் - சிறிதளவு
செய்முறை
வெஜ்டபிள் ஸ்டாக் கடைகளில் கிடைக்கும். வீட்டிலேயும் தயாரித்து கொள்ளலாம். கேரட், வெங்காய், , காலிஃப்ளார் பார்ஸ்லி, தைம் (Thyme), பேசில் இலை (Basil Leaves), வெங்காய தாள் உள்ளிட்டவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து அதிலிருந்து காய்கறிகளை நீக்கி விட்டால் அவ்ளோதான். வெஜிடபிள் ஸ்டாக் தயார். இந்த தண்ணீரை நீங்க சூப் செய்ய பயன்படுத்தலாம்.
கடாய் சூடானதும் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், ப்ரோக்கோலி, கேரட், சேர்த்து நன்றாக வேக வைக்கவும். காய் வெந்ததும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். இதோடு, பூண்டு பொடி, வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து நன்றாக கொத்க்க விடவும். 5 நிமிடங்கள் கொதித்ததும் பால், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக கிளறி கொதிக்க வைத்தால் ப்ரோக்கோலி சூப் ரெடி..
ப்ரோக்கோலி சூப்
என்னென்ன தேவை?
ப்ரோக்கோலி - 1
பூண்டு, இஞ்சி - சிறிய அளவு
ஊறவைத்த பாதாம் பருப்பு - ஒரு சிறிய கப்
உப்பு தேவையான அளவு
துருவிய பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
மிளகுத்தூள்- 2 ஸ்பூன்
செய்முறை
கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த பாதாம், ப்ரோக்கோலி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். கூடவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும். அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம். ப்ரோக்கோலி நன்றாக வெந்ததும் ஆற வைக்கவும். ஆறிய ப்ரோக்கோலியை மிக்ஸி ஜாருக்கு மாற்றி அரைக்கவும். ரொம்பவும் நைஸாக அரைக்க வேண்டாம். அரைக்கும்போது தண்ணீர் சேர்க்க வேண்டாம். துருவிய பாதாமை எண்ணெய் வறுத்து எடுக்கவும். இப்போதோ அரைத்த ப்ரோக்கோலி சாற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் பொரித்த பாதாமை சேர்த்து கொஞ்சம் சூடு செய்து மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.
ப்ரோக்கோலி சூப் ரெடி. இதோடு வால்நட், முந்திரி உள்ளிட்டவைகளையும் சேர்த்து இதே முறையில் சேர்க்கலாம். தேவையெனில், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷான க்ரீம், தேங்காய் பால் சேர்த்தும் சூப் அருந்தலாம்.
ப்ரோக்கோலியில் நிறைய சத்துகள் இருப்பது நமக்கு தெரிந்ததுதான். ஊட்டச்சத்து மிகுந்த ப்ரோக்கோலியில் ரைஸ், புலாவ், பகோடா, ப்ரோக்கோலி தோசை என செய்வதுபோலவே, சூப் செய்து சாப்பிடுவது நல்லது.