Diwali Sweet: தீபாவளி என்றாலே ஸ்பெஷல் தான் அதை மேலும் ஸ்பெஷலாக்க இந்த தீபாவளிக்கு விதவிதமான ஸ்வீட்களை செய்து அசத்துங்க. நாம் வழக்கமாக லட்டு, அதிரசம், கொழுக்கட்டை, பாதுஷா உள்ளிட்ட இனிப்புகளை செய்வோம். ஆனால் இப்போது வித்தியாசமான ஒரு இனிப்பு வகையை தான் பார்க்க போகின்றோம். வாங்க சுவையான பாதாம் எள்ளு இனிப்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்



  • 2 கப் கோதுமை மாவு

  • 2 1/2 டீஸ்பூன் ரவை

  • 1/4 கப் வறுத்த பாதாம் துண்டுகள்

  • 1/4 கப் வறுத்த வெள்ளை எள் தூள்

  • 3/4 கப்  நெய்

  • 1 1/2 டீஸ்பூன் கடலை மாவு

  • 1 கப் சர்க்கரை

  • 1/2 கப் தண்ணீர்

  • 1/2 தேக்கரண்டி பச்சை ஏலக்காய் தூள்

  • 1 டீஸ்பூன் வறுத்த வெள்ளை எள்

  • 3 டீஸ்பூன் வறுத்த முழு பாதாம்


செய்முறை


1. ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, அதில் ரவை மற்றும் கோதுமை மாவு சேர்க்கவும்.  மாவு பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும்.

 


2. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரை கலந்து, குறைவான தீயில் அடுப்பில் வைக்க வேண்டும். ஒற்றை சரம் சர்க்கரை பாகு உருவாகும் வரை வேக வைக்க வேண்டும்.
 

4.கோதுமை மாவு கலவையுடன் சர்க்கரை பாகை கலந்து அதனுடன் பச்சை ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். 


கலவை சிறிது ட்ரை ஆகும் வரை வேக வைக்க வேண்டும். வறுத்த பாதாம் துண்டுகள் மற்றும் அரைத்த வெள்ளை எள் ஆகியவற்றை கலவையில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 

 

5.இந்த கலவையை சிறிது நேரம் ஆற விட வேண்டும். கலவையை சம பாகங்களாகப் பிரித்து வட்ட வடிவில் பின்னிகளை தயாரிக்க வேண்டும்.



 

6.வறுத்த பாதாமை இரண்டாக நறுக்கி, பின்னியின் மேல் வைத்து, வறுத்த வெள்ளை எள்ளில் பின்னிகளை மெதுவாக உருட்டி எடுத்தால் சுவையான பின்னிகள் தயார்.