Mushy Rice : சாதம் அதிகமா வெந்து குழைஞ்சுபோச்சா? ஈஸியா சரி பண்ணலாம்.. இந்த டிப்ஸ படிங்க.. இந்திய சமையலில் அரிசி சாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அரிசியை சரியான பதத்தில் சமைக்கவில்லை என்றால் அது பிரியாணியாகவே இருந்தாலும் அதன் சுவை குறைந்து விடும். சமைக்கும் போது, ​​சில சமயங்களில் சாதம் லேசாக குழந்து ஒட்டும்தன்மையுடன் இருப்பதை பார்க்க முடியும்.  இதனால் உணவின் சுவை சற்று குறைந்து விடும். இதற்கு காரணம் சரியான அளவில் தண்ணீரை பயன்படுத்தாது இருப்பதுதான். அல்லது அரிசியின் தன்மையை பொறுத்தது.  அரிசி சாதம் நன்கு வெந்து ஒன்றொடோன்று ஒட்டாமல் வரும்போது அந்த சாதம் சுவையானதாக இருக்கு. எனவே அரிசி சாதம் சில நேரங்களில் குழைந்து விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.


அரிசி சாதம் குழைந்துவிட்டால் அதை சரி செய்ய டிப்ஸ்


1.அதிகப்படியான நீரை வடிக்கட்ட வேண்டும்


ரைஸ் குக்கரில் அரிசியை சமைக்கும்போது அது குழையாமல் சாதமாக கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.  ஒருவேளை குழைந்துவிட்டால் குக்கரில் சாதத்துடன் அதிகப்படியான   தண்ணீரை ஒரு சல்லடை அல்லது வடிகட்டியை பயன்படுத்தி வடிக்க வேண்டும்.  இப்போது குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து சற்று சூடுபடுத்த வேண்டும். அப்போது சாதத்தில் உள்ள ஈரப்பதம் ஆவியாகி விடும். 


2.குழந்தை சாதத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சரி செய்யலாம்


அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றிய பிறகும் உங்கள் சாதத்தில் ஒட்டும் தன்மையை உணர்ந்தால், சாதத்தை ஒரு தட்டில் சமமாக பரப்பி 20-30 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். வெளியே எடுப்பதற்கு முன், தண்ணீர் முழுமையாக வறண்டுவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது சாதத்தை எடுத்து மீண்டும் லேசாக சூடுபடுத்திக்கொள்ள வேண்டும்.


3. மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சரி செய்யலாம்


சாதம் குழைந்து விட்டால், மைக்ரோவேவ்  ​​ஓவன் ட்ரேயில் பேக்கிங் பேப்பரை வரிசையாக வைத்து, அதன் மீது சாதத்தை ஒரே அடுக்காகப் பரப்பவும். 180 டிகிரி C வெப்பநிலையில் 4-5 நிமிடங்கள் அல்லது தண்ணீர் வற்றும் வரை விட வேண்டும். தற்போது நல்ல மலர்ந்த நிலையிலான சாதம் கிடைக்கும்.


4. ரொட்டி துண்டுகளைப் பயன்படுத்தலாம்


குழைந்த சாதத்தை சரி செய்ய ரொட்டி துண்டுகளை பயன்படுத்தலாம். தண்ணீரை வடிகட்டிய பிறகு, அரிசியை மீண்டும் பாத்திரத்திற்கு மாற்றவும். இப்போது அந்த சாதத்தின் மீது  2-3 ரொட்டி துண்டுகளால் பரப்பி விட்டு சில நிமிடங்கள் மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும். சிறிது நேரம் கழித்து, ரொட்டி அரிசியிலிருந்து அனைத்து தண்ணீரையும் உறிஞ்சியிருக்கும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, பறிமாறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன் சாதத்தில் இருந்து ரொட்டி துண்டுக்களை எடுத்துவிட்டு பரிமாறலாம்.