'Detoxifying' நம் உடலுக்கு ரொம்பவே அவசியமானது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவது உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அன்றாட வாழ்கையில் நாம் சாப்பிடும் உணவுகளும், பல காரணங்களால் உடல் மாசுப்பட்டுவிடும். அதிகமாக பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க முடியாது.


இதனால் உடலில் சேரும் டாக்சின்ஸை இயற்கை முறையில் உடலில் இருந்து வெளியேற்றுவது. நமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஒருநாள் நல்லா கோழி, மீன், பிரியாணி போன்ற உணவுகளை சாப்பிட்டுவிட்டு மறுநாள் தயிர், ரசம்னு வயிறு நல்லாயிருக்கனும் சாப்பிடுவோம் இல்லையா. இதுதான். இயற்கையான வழிமுறையில் டீடாக்ஸ் செய்வது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்களை காணலாம்.


வேம்பு


வேப்பம் பூ, இலை எல்லாம் நிறைய ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. வாயு, பசியின்மை, குமட்டல், மயக்கம், வாந்தி முதலான பிணிகளுக்கு வேப்பம் பூ ரசம், துவையல் செய்து சாப்பிடுவது நல்லது. வேப்பம் இலையை நன்றாக மைய அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். ,மாதத்தில் இரண்டு முறை வேப்பம் இலை விழுதை சாப்பிட்டால் நல்லது.  வேப்பம் பூவில் உள்ள கசப்பு உடலின் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவும். 


குடுச்சி மூலிகை 


ஜிலோய் / குடுச்சி மூலிகை இலை. ஆயுர்வேதத்தி;ல் குடுச்சியானது புத்துணர்ச்சிக்கு சிறந்த மூலிகை என கூறப்படுகிறது. உடலை இயற்கையாக க்ளன்ஸ் செய்வதில் குடுச்சி மூலிகை சிறந்த பங்கை வகிக்கிறது.  இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


மஞ்சிஸ்தா


மஞ்சிஸ்தா என்பது மூலிகை வகை. இது ஹார்மோன் பிரச்னைகளுக்கு உதவும். இரத்த்தை சுத்தப்படுத்தவும் உடலில் உள்ள நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுவதிலும் இது மிகச் சிறப்பாக செயல்படும்.


Chitrak


சித்ரக் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தையும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. சரும பராமரிப்பு, மைக்ரேன் ஆகியவற்றை குணப்படுத்த உதவும். 


நெல்லிக்காய் ஜூஸ்:


நெல்லிக்காயில் அதிகளவில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. மேலும் நெல்லியில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், செரிமானப்பிரச்சனைக்குத் தீர்வாக உள்ளது. இதோடு உடல் எடைக்குறைப்பதற்கும் உதவுகிறது. எனவே உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு இனி மேல் தினமும் காலை வேளையில் நெல்லிக்காய்களை எடுத்து ஜூஸ் செய்து சாப்பிடலாம்.


தேன் எலுமிச்சை இஞ்சி டீ: சூடான இஞ்சி டீயில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்துச்சாப்பிடலாம்.  இந்த பானத்தைப் பருகுவதன் மூலம் உடலில் உள்ள தேவையில்ல கொழுப்புகள் குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.


மஞ்சள் இஞ்சி கிரீன் டீ:


தினமும் காலையில் மஞ்சள் இஞ்சி கிரீன் டீயை குளிர்கால நேரங்களில் தினமும் பருகுவதன் மூலம் தொண்டைக்கட்டு, இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. எனவே பாத்திரத்தில் 2 டம்ளர் எடுத்து அதனுடன் இஞ்சித்துருவல், மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் நல்ல பலனளிக்கும்.


எலுமிச்சை, தேன் தண்ணீரில் இருந்து மூலிகைகள் மற்றும் விதைகள் கலந்த நீர் வரை, உங்கள் தேவைக்கேற்ப பானங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த ஆரோக்கியமான பானங்கள் அனைத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நமக்கு நிச்சயம் பலனளிக்கும்.


ஒரு பானத்தை முந்தைய நாளே தயார் செய்து வைத்து, காலையில் படுக்கையை விட்டு எழுந்த உடனேயே குடித்து உற்சாகமாக உங்கள் நாளைத் தொடங்க விரும்புகிறீர்களா? டீடாக்ஸ் நீ குடிங்க.