வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் சுவைமிக்க சிக்கன் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் இந்த Lemon Pepper Chicken Recipe உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். எலுமிச்சையின் புளிப்பும், மிளகின் காரமும் சேர்ந்து இந்த சிக்கனுக்கு தனி சுவையை கொடுக்கும். எளிதான முறையில், குறைந்த பொருட்களுடன் செய்யக்கூடிய இந்த ரெசிபியை இப்போது பார்க்கலாம்.

Continues below advertisement

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 1 கிலோ
  • எலுமிச்சை பழம் – 1 (பாதி + பாதி)
  • மிளகுத்தூள் – 1 ½ டீஸ்பூன்
  • உப்பு – 1 ¼ டீஸ்பூன்
  • இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • தயிர் – ¾ கப்
  • சர்க்கரை – ½ டீஸ்பூன்

மரினேட் செய்வது எப்படி?

ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கனை போட்டுக்கொள்ளவும்

அதனுடன்:

Continues below advertisement

  • எலுமிச்சை சாறு – பாதி
  • மிளகுத்தூள் – 1 ½ டீஸ்பூன்
  • உப்பு – 1 ¼ டீஸ்பூன்
  • இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • தயிர் – ¾ கப்
  • சர்க்கரை – ½ டீஸ்பூன்

இந்த அனைத்தையும் நன்றாக கலந்து, 30 நிமிடங்கள் மரினேட் செய்து வைக்கவும்.

சமைக்கும் முறை

  1. ஒரு பெரிய கடாயில் எண்ணெய் மற்றும் பட்டர் (அல்லது நெய்) சேர்த்து காய வைக்கவும்.
  2. அதில் பிரியாணி இலை, 5–6 முழு மிளகு மற்றும் பட்டை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.
  3. இப்போது மரினேட் செய்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, ஒவ்வொரு பக்கமும் 2 நிமிடம் வறுக்கவும்.
  4. மீதமுள்ள மரினேட் கலவையை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடம் மெதுவாக சமைக்கவும்.
  5. அதன் பிறகு பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் மற்றும் கார்ன்ஸ்டார்ச் கரைசலை சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. சிக்கன் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

சூடாக சுவைமிக்க லெமன் பெப்பர் சிக்கன் தயார்! 

இதை சப்பாத்தி, நாண், ரொட்டி அல்லது சாதம் உடன் பரிமாறலாம்.

கார்ன்ஸ்டார்ச் கரைசல் செய்வது எப்படி?

கார்ன்ஸ்டார்ச் கரைசல் செய்வதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் 1½ டீஸ்பூன் corn starch சேர்த்து, அதில் ½ கப் தண்ணீரை மெதுவாக ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கலக்க வேண்டும். முழுவதும் கரைந்து பால் போல மெல்லிய திரவமாக வந்தால் cornstarch slurry தயார்.