உணவே மருந்து என்ற திருமூலரின் வாக்கு எவ்வளவு உண்மையானது என்பதை அதன் வழி நின்று வாழ்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் உணவில் சில விஷயங்களை நாம் சேர்த்து உண்ணக்கூடாது என்று கூறுவார்கள். இது மூடநம்பிக்கை அல்ல. அறிவியல்.
அப்படிப்பட்ட உணவு வகைகள் சிலவற்றை உங்களுக்காக நாங்கள் பட்டியலிடுகிறோம்.
1. முட்டையும், பன்றி இறைச்சியும்
முட்டை, பன்றி இறைச்சி. இந்த இரண்டையும் சேர்த்து உண்ணவே கூடாது. இவ்வாறு செய்தால் இரண்டிலும் இருக்கு அதீத புரதம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் (மெட்டபாலிஸம்) சிக்கல் ஏற்படுத்தலாம். இதனால் உடல் சோர்வடையலாம்.
2. பர்கர் மற்றும் ஃப்ரைஸ்
பர்கர் மற்றும் பிரெஞ்சு ஃப்ரைஸை எக்காரணம் கொண்டு சேர்த்து சாப்பிடவே கூடாது எனக் கூறுகின்றனர் டயட்டீசியன்கள். ஆனால் நாம் வாங்கும் துரித உணவுக் கடைகளில் எல்லாம் இவற்றை காம்போ ஆஃபரில் தான் தருகின்றனர். இனி இப்படி காம்போ ஆஃபரில் வாங்கினாலும் கூட ஒருவர் பர்கர் ஒருவர் ஃப்ரைஸ் எனப் பிரித்துக் கொள்ளுங்கள்.
3. பருப்பு வகைகள் மற்றும் ஜூஸ்
காலை உணவை மேற்கத்திய உணவு ஸ்டைலில் உட்கொள்கிறோம் என்ற பெயரில், ஒரு கப் ஓட்ஸ் மீலும், ஒரு குவளை ஆரஞ்சு ஜூஸும் குடிப்பவரா நீங்கள். இந்த அலர்ட் உங்களுக்கானது தான். தயவு செய்து இந்தக் காம்போவை தவிர்த்து விடுங்கள். சீரல்ஸிக் உள்ள கார்ப்ஸ் சத்தும், ஜூஸில் உள்ள சிட்ரிக் அமிலமும் உடலை ரொம்பவே கனமாக உணர வைத்துவிடும்.
4. பீட்சா மற்றும் சோடா
பீட்சா இத்தாலியர்களின் உணவு. அவர்கள் நாட்டின் தட்பவெப்பம். அவர்களின் உடல் வாகு. அவர்கள் அதை செய்யும் முறை என எல்லாவற்றிலும் மாறுபாடு இருக்கும் என்பதால் அவர்களுக்கு அது ஸ்டேபிள் ஃபுட். ஆனால் நாம் அதை லக்சுரி உணவாக உண்டு கொண்டிருக்கிறோம். சரி ஸ்டைலுக்கு சாப்பிட்டுப் போங்கள். ஆனால், பீட்சாவுடன் சோடாவை சாப்பிடாதீர்கள். உணவை ஜீரனமாகாமல் அது தடுத்துவிடும்.
5. ஆலிவ் ஆயில் மற்றும் நட்ஸ்
ஆலிவ் விதைகளும், உலர் கொட்டைகளும் ஒன்றாக உண்ணக் கூடாது உணவு வகைகளில் ஒன்று. ஆலிவ் ஆயிலில் இருக்கும் கொழுப்பும், உலர் கொட்டைகளில் உள்ள புரதமும் ஒத்துப்போகாது. இரண்டையும் ஒன்றாக உண்ணும்போது கேஸ்ட்ரிக் எனப்படும் வாயு உபாதைகள் ஏற்படும்.
6. தயிரும் பழங்களும்
தயிர் அல்லது யோக்ஹர்ட்டை பழங்களுடன் சேர்த்து உண்ணக் கூடாது. காரணம் யோகர்ட் அசிடிக் அதாவது அமிலத்தன்மை கொண்டது. பழங்கள் நார்ச்சத்து கொண்டது. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்ப்பதால் அலர்ஜிக்கள் உண்டாகலாம்.
7. உணவுக்குப் பின் பழங்கள்
வயிறு புடைக்க உணவு உண்ட பின்னர். டெஸர்ட் எனச் சொல்லி பழங்கள் சாப்பிடுபவர்களா நீங்கள். மற்ற உணவுகளை செரிமானத்துக்கு உட்படுத்தும் உடல் அவற்றுடன் உண்ணப்பட்ட பழத்தில் இருக்கும் நார்ச்சத்தை அப்படியே விட்டுவிடும். பழம் செரிமானம் ஆக நேரம் ஆகிவிடும்.
இதேபோல் எலுமிச்சையும் இருமல் மருந்தும் சேர்த்து சாப்பிடக் கூடாது. ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். உருளைக் கிழங்கையும் இறைச்சியையும் ஒன்றாக சமைக்கக் கூடாது. இரண்டுமே மிகவும் சத்துக்கள் நிறைந்த உணவு. பாலையும் வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கும். அழற்சிக்கான மருந்து உட்கொள்ளும் போது ஆப்பிள் ஜூஸ் சாப்பிடக் கூடாது. ஆப்பிள் பழச்சாறு மருந்தின் வீரியத்தைக் குறைத்துவிடும்.