உணவு எப்போதுமே சுவாரஸ்யமான விஷயம். கொரோனாவால் உலகையே பூட்ட முடிந்தது. உணவகங்கள் மட்டுமே பார்சல் உண்டு என இயங்கியதே. உணவில்லாவிட்டால் உலகில்லை என்பது அடிப்படையான உண்மையும் கூட


அப்படிப்பட்ட உணவில் தான் எத்தனை எத்தனை வகை, எத்தனை எத்தனை சுவை. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பாரம்பரிய உணவு. அதுவும் பல மலர் கொண்ட பூச்சண்டு போன்ற இந்தியாவில் இன்னும் ஆயிரமாயிரம் சுவையான உணவு வகைகள் உண்டு. மாநிலத்துக்கு ஒன்று, வட்டாரத்துக்கு ஒன்று என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படி நம் இந்திய உணவில் கலந்துவிட்ட சில உணவுகள் உண்டு. ஆனால் அவற்றின் துவக்கம் இந்தியா அல்ல என்ற சுவாரஸ்யமான தகவலைத் தான் உங்களுடன் பகிரப் போகிறோம்.


1.மோமோ: திபெத்


மோமோ எல்லா இந்தியர்களுக்கும் பிடித்தமான இந்த உணவு இன்று பல சுவைகளிலும் கிடைக்கின்றது. நம்மில் பலர் இது சீன உணவு என்று கூட நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் இது திபெத்திய உணவு என்றால் உங்களால் நம்ப முடிகிறது. உணவைக் கூட ஆக்கிரமித்து இருக்குமோ சீனா!


2. சமோசா..பிறப்பிடம் மத்திய கிழக்கு நாடுகள்
மத்திய கிழக்கு நாடுகளின் உணவுக்கு தனி சுவையும் மனமும் உண்டு. அங்கு இறைச்சியும் குறிப்பாக ஆட்டிறைச்சியும், உலர் பழங்கள், கொட்டை வகைகளும் ரொம்பவே பிரபலம். அந்தக் காலத்தில் வர்த்தக ரீதியாக வந்தவர்கள் தங்களுடன் கொண்டுவந்த திண்பண்டம் தான் சமோசா. நாம் அப்படியே அதை ஸ்வீகரித்துக் கொண்டோம்.


3.குலாப் ஜாமூன்; பெர்சியா


தீபாவளி வந்துவிட்டால் போதும் டிவியில் குலாப் ஜாமூன் விளம்பரம் களைகட்டிவிடும். ஆனால் உண்மையில் குலாப்ஜாமூன்களின் பிறப்பிடம் பெர்சியாவாம். இதன் இயற்பெயர் லோம்கா. மத்தியதரைகடல் நாடுகளில் இந்த இனிப்பு வகைக்கு அவ்வளவு மவுசு.




4. தேநீர்; சீனா


தேநீர் என்றால் நாம் நினைவில் கொள்ள வேண்டியது சீனாவைத்தான். இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார் சீனாவிலிருந்து தேயிலையைக் கொண்டுவந்து இங்கு விளைவித்தனர். இன்று அசாம் தேயிலை தனக்கென சர்வதேச அளவில் ஓர் அடையாளத்தைப் பெற்றுள்ளது. இன்று தேநீர் நமது தேசிய பானம் என்றளவுக்கு ஊடுருவியுள்ளது.


5. பருப்புச் சோறு; நேபாளம்


குழந்தைகளிடம் விளையாடும்போது கூட சோறு, பருப்பு, அப்பளம் என விரல் விட்டு நாம் கொஞ்சுகிறோம். பப்புச் சோறு வேணுமா என்று கெஞ்சுகிறோம். ஆனால் பருப்புச் சோறின் பிறப்பிடம் நேபாளமாம். நேபாள மக்களின் பிரதான உணவே பருப்புச் சோறு தானாம். வரலாறு முக்கியம் தெரிந்து கொள்ளுங்கள்.


6. இட்லி; இந்தோனேசியா


இட்லியின் பிறப்பிடம் இந்தோனேசியா என்று சொன்னால் நீங்கள் கொதிக்க வேண்டாம். ஏன் என்றால் உண்மை அதுதான். இந்தியாவுக்கு அதை இந்தோனேசியாவில் இருந்து கொண்டு வந்தவர்கள் அரேபியர்கள் என்கிறது சாப்பாட்டுப் புராணம்.




7. ராஜ்மா; மெக்சிகோ


கிராமத்துக்கு கடைகளில் கூட மிட்டாய் பாட்டிலில் கொட்டி வைத்து விற்கப்படும் ராஜ்மா மெக்சிகோவில் இருந்து வந்ததாம். அங்கு டாக்கோஸ் எனும் உணவு ரொம்பவே பிரபலம். அந்த உணவின் ஸ்டஃபிங்கில் ராஜ்மா இல்லாமல் இருக்காது.


8. சுக்டோ; போர்ச்சுகல்


மேற்குவங்கத்துக்கு நட்புகளே இவ்வளவு காலம் நீங்கள் கொண்டாடி வரும் சுக்டோவின் பிறப்பிடம் போர்ச்சுகலாம். அங்குதான் காய்கறிகளையும் இறைச்சியையும் சேர்த்து இப்படியான உணவை செய்துள்ளார்கள். அது எப்படியோ வங்கத்துக்கு வந்துவிட்டது.




இன்னும் நிறைய இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். ஜிலேபி, ஃபில்டர் காஃபி, சிக்கன் டிக்கா, சிக்கன் விந்தாலூ, நான் ரொட்டி என நிறைய உணவு வகைகள் வெளிநாட்டில் உருவானவை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.