வாரம் முழுவதும் லன்ச் பாக்ஸ்ல என்ன சாப்பாடு கொடுக்கிறதுன்னு சிலர் திட்டமிடுவது உண்டு. இதோ வெள்ளரிக்காய் ரைஸ்-யுன் லிஸ்ட சேர்த்துக்கங்க.

என்னென்ன தேவை?

வேகவைத்த சோறு - ஒரு கப்

துருவிய வெள்ளரிக்காய் - 1 1/2 கப்

துருவிய தேங்காய் - அரை கப்

பொடியாக நறுக்கியு கொத்தமல்லி தழை - சிறிதளவு

தாளிக்க

முந்திரி -  10 

வறுத்த வேர்க்கடலை - அரை கப்

காய்ந்த சிகப்பு மிளகாய் - 2

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

கடுகு - அரை டீ ஸ்பூன்

சீரகம் - அரை டீ ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை டீ ஸ்பூன்

பெருங்காய தூள் - ஒரு டீ ஸ்பூன்

கருவேப்பிலை - சிறதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாய் நன்றாக சூடானது மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். தேவையான அளவு சேர்க்கலாம். இதில் கடுகு, சீரகம், காய்ந்த சிகப்பு மிளகாய், உளுந்து, கருவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும்..இதில் முந்திரி சேர்த்து கொள்ளவும். வேர்க்கடலையும் சேர்க்கலாம். அது நன்றாக பொன்னிறமாக வதங்கியதும் துருவிய வெள்ளரிக்காய், தேங்காய், உப்பு, பெருங்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.  வெள்ளரிக்காய் கொஞ்சம் வதங்கியதும் வேக வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். வெள்ளரிக்காய் ரைஸ் ரெடி. 

வெள்ளரிக்காய் நன்மைகள்

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் கே அதிக அளவில் இருக்கிறது. எலும்பின் அடத்தி அதிகரிக்கும். 

சரும பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் ஜூஸ் தினமும் குடிக்காலாம்.

வெள்ளரிக்காய் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் உடை எடை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம். 

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.  உடலை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும், கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், இரத்தத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு உடலுக்கு கொடுக்க கூடியது வெள்ளரிக்காய். 

பிரெட் Poha

 தேவையான பொருட்கள்: 

பிரெட் - 1 கப்

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது )

வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கப்

வேகவைத்த உருளைக் கிழங்கு - 2 

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வேர்க்கடலை - ஒரு கைப்பிடி

எலுமிச்சை சாறு - தேவையான அளவு ( தேவையில்லையெனில்)

செய்முறை: 

  •  பிரெட்டை டோஸ்ட் செய்து எடுத்துகொள்ள வேண்டும். அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். 
  • கொத்தமல்லியை பச்சை மிளகாயுடன் சேர்த்தி மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கருவேப்பிலை, வேர்க்கடலை ஆகியவற்றை தாளித்து கொள்ளவும். அதனுடன்  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதோடு கொத்தமல்லி விழுதைச் சேர்க்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும். 
  • நன்றாக வதங்கிய பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி மற்றும் உருளைக் கிழங்கை சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்,  டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
  • 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். 
  • பிறகு, கொத்தமல்லி இலைகள் மேலே தூவி இறக்கவும். 
  • சுவை கொத்தமல்லி பிரெட் போகா ரெடி.

இதே முறையில் அவல் சேர்த்தும் இந்த உப்புமாவை செய்து சாப்பிடலாம்.