உங்களுக்கு மாலை நேரத்தில் போண்டா சாப்பிட வேண்டுமென்றால் அதற்காக மாவு அரைத்து கஷ்டப்பட வேண்டாம். அல்லது உடனடியாக மாவு தயார் செய்ய முடியாதே என வருந்த வேண்டாம். வீட்டில் இருக்கும் இட்லி மாவை வைத்து காரசாரமான சுவையான போண்டா செய்து விடலாம். வாங்க இந்த போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். 


சரியான புளிப்பு பதத்தில் இருக்கும் இட்லி மாவை இரண்டு கப் அளவு ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். 


ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு பற்கள் இரண்டு. 10 நிமிடம் வெந்நீரில் ஊற வைத்த 3 காய்ந்த மிளகாயையும் சேர்த்து நைசாக அரைத்து இட்லி மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ( காய்ந்த மிளகாயை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால்தான் நைசாக அரைபடும்) 


இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு அரிசி மாவு மற்றும் ஒரு ஸ்பூன் அளவு ரவையும், தேவையான அளவு உப்பும்  சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். 


இப்போது மாவுடன் சேர்ந்து ரவை நன்றாக ஊறி இருக்கும். இந்த மாவு போண்டா சுடும் பதத்திற்கு இருக்க வேண்டும். மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு ஸ்பூன் அரிசிமாவு சேர்த்து கலந்து கொள்ளலாம். 


இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடுகு சேர்த்து பொரிந்ததும், அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். கால் கப் அளவு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி வதங்கியதும் இட்லி மாவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 


இதை ஒருமுறை நன்றாக கலந்து விட்டு, பின் அடுப்பில் கடாய் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். 


எண்ணெய் சூடானதும். உங்களுக்கு எந்த அளவில் போண்டா தேவையோ அதற்கேற்றவாரு மாவை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும்.  போண்டா பொன்னிறமாக வெந்ததும் எடுத்துக் கொள்ள வேண்டும். 


அவ்வளவுதான் சுவையான கார போண்டா தயார். இதை தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவை மிகவும் நன்றாக இருக்கும். 


மேலும் படிக்க


Instant Crispy Dosa: இன்ஸ்டண்ட் மொறு மொறு தோசை... அதற்கு ஏற்ற சூப்பர் சட்னி : இப்படி செய்து அசத்துங்க! 


Poha Breakfast: வித்தியாசமான டேஸ்ட்டி காலை உணவு.. கார அவல் கொழக்கட்டை ரெசிபி...செய்முறை இதோ!


Peanut Dosa :தோசை மாவு இல்லையா? ஆரோக்கியமான வேர்க்கடலை தோசை.. காரச்சட்னி : இப்படி செய்து அசத்துங்க!