Creamy Cucumber salad: வெள்ளரிக்காய் போதும்; ஆரோக்யமான ஸ்நாக்ஸ் ரெசிபி இதோ!

Creamy cucumber salad: வெள்ளரிக்காய் சாலட் எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்.

Continues below advertisement

வெள்ளரிக்காய் அனைவரும் விரும்பி உண்ணும் ஒன்று. ஆரோக்கியமான ஒரு தினசரி ருட்டீனுக்கு நல்ல சாய்ஸ். ப்ரேக் நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற தோன்றினால் வெள்ளரிக்காய் சாலட் சாப்பிடலாம். எப்படி செயவது எனக் காணலாம்.

Continues below advertisement

வெள்ளரிக்காய் சாலட்

என்னென்ன தேவை?

வெள்ளரிக்காய் - 4

வெங்காயம் - 1 

தக்காளி- 1

தயிர் / யோகர்ட் - 2 கப்

எலுமிச்சை சாறு - சிறிதளவு

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

செய்முறை:

வெள்ளரிக்காயை தோல் நிக்கி சுத்தம செய்யவும். இதை வட்ட வடிவில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்க்கவும்.

இப்பொது கெட்டித்தயிர் அல்லது யோகர்ட்டை வெள்ளரிக்காயில் சேர்ந்த்து நன்றாக கலக்கவும். இதற்கு தேவையான உப்பு, சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறினால் வெள்ளரிக்காய் சாலட் தயார். 

 வெள்ளரிக்காய் ரைஸ்

என்னென்ன தேவை?

வேகவைத்த சோறு - ஒரு கப்

துருவிய வெள்ளரிக்காய் - 1 1/2 கப்

துருவிய தேங்காய் - அரை கப்

பொடியாக நறுக்கியு கொத்தமல்லி தழை - சிறிதளவு


தாளிக்க

முந்திரி -  10 

வறுத்த வேர்க்கடலை - அரை கப்

காய்ந்த சிகப்பு மிளகாய் - 2

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

கடுகு - அரை டீ ஸ்பூன்

சீரகம் - அரை டீ ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை டீ ஸ்பூன்

பெருங்காய தூள் - ஒரு டீ ஸ்பூன்

கருவேப்பிலை - சிறதளவு

உப்பு - தேவையான அளவு


செய்முறை

அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாய் நன்றாக சூடானது மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். தேவையான அளவு சேர்க்கலாம். இதில் கடுகு, சீரகம், காய்ந்த சிகப்பு மிளகாய், உளுந்து, கருவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும்..இதில் முந்திரி சேர்த்து கொள்ளவும். வேர்க்கடலையும் சேர்க்கலாம். அது நன்றாக பொன்னிறமாக வதங்கியதும் துருவிய வெள்ளரிக்காய், தேங்காய், உப்பு, பெருங்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.  வெள்ளரிக்காய் கொஞ்சம் வதங்கியதும் வேக வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். வெள்ளரிக்காய் ரைஸ் ரெடி. 

வெள்ளரிக்காய் நன்மைகள்

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் கே அதிக அளவில் இருக்கிறது. எலும்பின் அடத்தி அதிகரிக்கும். 

சரும பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் ஜூஸ் தினமும் குடிக்காலாம்.

வெள்ளரிக்காய் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் உடை எடை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம். 

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.  உடலை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும், கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், இரத்தத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு உடலுக்கு கொடுக்க கூடியது வெள்ளரிக்காய். 

Continues below advertisement
Sponsored Links by Taboola