Rajma Chilla: புரதம் நிறைந்த ராஜ்மா சில்லா எளிதாக செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Rajma Chilla: புரதம் நிறைந்த உணவு டயட்டில் இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் சில்லா எப்படி செய்ய வேண்டும் என்று காணலாம்.

Continues below advertisement

ஒரு நாளை ஆற்றலுடன் எதிர்கொள்ள ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை  நாள் முழுவதும் புத்துணர்வுடன் எல்லா வேலைகளையும் செய்ய  தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும். அதோடு, ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்றாலும் சரி ஆரோக்கியமானதை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சியும் மனசோர்வை நிர்வகிப்பது மகிழ்ச்சியான வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement

முழு தானியங்கள், சிறு தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை தினமும் உணவில் சேர்த்துகொள்வது நல்லது. இரும்புச்சத்து, புரதம் என உடலுக்கு தேவையானது கிடைத்துவிடும்.  அந்த வகையில், கொண்டைக்கடலை, ராஜ்மா வைத்து சில்லா செய்து சாப்பிடுவது ஊட்டச்சத்து நிறைந்தது என்று தெரிவிக்கின்றனர். சில்லா மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். ஒரு எனர்ஜெட்டிக்கான உணவும் கூட.  சில்லா பாரம்பரியமாக கடலை மாவு பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.

என்னென்ன தேவை?

கடலை மாவு - ஒரு பெரிய கப்

ராஜ்மா - ஒரு கப்

துருவிய கேரட்- ஒரு கப்

துருவிய தேங்காய் - அரை கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப் 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2

மஞ்சள் - ஒரு டீ ஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ராஜ்மா  6-7 மணி நேரம் நன்றாக ஊறை வைத்து அதை நன்றாக வேக வைத்து எடுத்துகொள்ள வேண்டும். பிறகு ராஜ்மாவை நன்றாக மசிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் ராஜ்மா, பொடியாக நறுக்கிய  வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி,  கடலை மாவு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை சுடும் பதத்திற்கு மாவு இருக்க வேண்டும். மாவு தயாரானதும் 5 நிமிடங்கள் கழித்து தோசைகளாக ஊற்றி எடுக்கவும். 

தோசை கல்லில் மிதமான தீயில் மெலிதாக இல்லாமல் அடை மாதிரி வட்டமாக வார்க்கவும். மறுபுறம் புரட்டி, இருபுறமும் வேகும் வரை அதனை நன்கு சமைக்கவும். இதற்கு தேங்காய் எண்ணெய், நெய் என உங்கள் விருப்பபடி எதுவேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.  பொன்னிறமாக மாறியதும் எடுத்தால் அவ்வளவுதான். ஊட்டச்சத்துமிக்க ராஜ்மா சில்லா ரெடி!

இதற்கு புள்ளிப்பும் காரமும் நிறைந்த தக்காளி, வெங்காயம் சட்னி, புதினா சட்னி என எதுவேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். இதே செய்முறையில் முளைக்கட்டிய கொண்டைக்கடலை, நவதானியங்கள் என சேர்த்து சில்லா செய்து சாப்பிடலாம். புரதம் அதிகம் நிறைந்த உணவு.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola