கேரட் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன? பனீர் பராத்தா ஸ்டைலில் கேரட் பராத்தா செய்து கொடுங்க. இதை குழந்தைகள் மதிய உணவிற்கும் செய்து கொடுக்கலாம். கேரட் சாதம் விரும்பி சாப்பிடும் குழந்தைகள் என்றால் அவர்களுக்கு பிடிக்கும். கேரட் கட்லட், கேரட் அடை, கேரட் தோசை என செய்து கொடுங்க. 


கேரட் பராத்தா


என்னென்ன தேவை?


கோதுமை மாவு - இரண்டு கப்


இளஞ்சூடான நீர் - ஒரு கப்


நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்


ஸ்டஃப்பிங்


கேரட் - 5 


பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்


பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு


பச்சை மிளகாய பொடியாக நறுக்கியது - 1 


மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


செய்முறை:


கோதுமை மாவில் உப்பு சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். மாவு நன்றாக ஸ்டாஃப்டாக இருக்கும்.


ஸ்டஃப்புங்கிற்கு கேரட்டை தோல் சீவி நன்றாக துருவி வைக்கவும்.  அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் அதோடு மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். 


தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும். மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும், 


தயிர் உடன் சூடான கேரட் பராத்தா நல்ல காம்பினேசன். சுவைத்து சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு தயிர் உடன் சிறிது தேன் சேர்த்து இனிப்பாக வைக்கலாம்.


இதே செய்முறைதான். கேரட்டிற்கு பதிலாக பனீர் பயன்படுத்தினால் பனீர் பராத்தா தயார். இதில் பீட்ருட், பரங்கிக்காய் சேர்த்தும் பராத்தா செய்து கொடுக்கலாம். குழந்தைகள் என்ன காய்கறி விரும்பி சாப்பிடுவார்களோ அதை செய்யலாம். உங்களுக்கும் பிடித்தமானதை ஸ்டஃப் செய்து பராத்தா செய்யலாம்.


பனீர் பராத்தா செய்முறை:


கோதுமை மாவில் உப்பு சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். ஸ்டஃப்புங்கிற்கு பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். துருவிய பனீர் சேர்த்தும் செய்யலாம்.  அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் அதோடு மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.


மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். பனீர் பராத்தா தயார். தயிர் உடன் மிளகாய் தூள் சேர்த்து சுவைக்கலாம். வெண்ணெய் சேர்த்து பராத்தா செய்யலாம். இதில் ஸ்ட்பிங்கில் சீஸ் சேர்த்து செய்தாலும் சுவை நன்றாக இருக்கும். செய்து அசத்துங்க!