உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான மக்கள், காலை எழுந்தவுடன் பெட் காஃபி அல்லது பெட் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு காலையில் காபி குடிக்காமல் விட்டுவிட்டால், அன்றைய நாள் முழுவதும், முழுமை அடையாமல் ஏதோ ஒன்று குறைவதை போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இவ்வாறாக மனிதனுக்கு அவசியமான மூச்சுக்காற்றை போல, காஃபி அல்லது டீ என்பது மனிதர்களிடம் பிரிக்க முடியாது ஒரு பழக்கமாகிவிட்டது.


இந்த காஃபியை அளவாக குடிக்கும் போது, சோர்வு நீக்குவது, நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிப்பது, சிறிய அளவில் தலைவலியை சரி செய்வது மற்றும் உடலுக்கு சுறுசுறுப்பை தருவது என, நிறைய நன்மைகள் இருப்பதை மறுக்க முடியாது. அதே நேரம், அளவுக்கு அதிகமாக காஃபியை பருகும் போது, நீரிழிவு நோய், முகப்பரு, சரும பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் போன்றவை ஏற்படும் என்பதை மறுப்பதற்கு இல்லை.


இந்த காஃபியில்,பால் கலந்து காஃபி மற்றும் பில்டர் காஃபி என இந்திய மக்களால் குடிக்கப்படுகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை, பால் கலந்த பில்டர் காபி என்பது மிகவும் விரும்பத்தக்க ஒரு பானமாக இருக்கிறது.


மேலும் பால் இல்லாமல் பிளாக் காஃபி  ஐரோப்பிய நாடுகளில்   பெரும்பான்மையான மக்களால் குடிக்கப்படுகிறது.கோல்ட் காஃபி என காப்பியானது,குளிர்பானமாகவும் அருந்தப்படுகிறது.இதில் நிறைய வகைகளாக சாக்லேட் காஃபி எனவும் பயன்படுத்தப்படுகிறது.


 மேலும் சாக்லேட்டுகளிலும் காஃபி கலக்கப்பட்டு,மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது.இப்படிப்பட்ட காஃபியானது,நமது ஆற்றலை அதிகரிக்கவும்,உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் பயன்படுகிறது.


காஃபியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து நிவாரணத்தை அளிக்கிறது. ஆனாலும், அதிகப்படியான காஃபி குடிப்பதினால், உடலில் அதிகப்படியான கார்டிசோல் திரவம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சருமம் மற்றும் எண்ணெய் துளைகளை அடைத்து, முகப்பருவை உருவாக்குகிறது.


மேலும் முகப்பரு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மனித உடலில் உள்ள,கார்டிசோல் ஹார்மோனை பாதிக்கிறது. இது மன அழுத்தத்தை  தூண்டுகிறது. ஆகையால் அளவுக்கு அதிகமாக காஃபி குடிக்கும் போது, மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. முகப்பருவம் ஏற்படுகிறது. காஃபியில் காஃபின்  அதிகம் இருப்பதால்,இதனை உட்கொள்பவர்களுக்கு பெரும்பாலும் வயிற்றுப்போக்கு அல்லது அஜீரண கோளாறு ஏற்படுத்தும். காஃபியை அதிகமாக குடித்தால்  ஒற்றைத் தலைவலி ஏற்படும். அதுவே  அளவாக குடிக்கும் போது, தலைவலியை  சரி செய்யும்.


காஃபி நிறைய குடிக்கும் போது அதில் உள்ள,காஃபின் தூக்க சுழற்சியை மட்டுமல்ல, நம் உடலில் உள்ள நாளமில்லா அமைப்பையும் பெரிதும் பாதிக்கிறது.குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதன் மூலமும், இதயத் துடிப்பை வேகப்படுத்துவதன் மூலமும், கார்டிசோலின் அளவைச் உயர்த்தி, இரத்தத்தில் அட்ரினலின் உற்பத்தி செய்யும்,அட்ரீனல் சுரப்பியைத் தூண்டுவதற்கு காரணமாகிறது.


அளவுக்கு அதிகமாகக் காஃபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைகிறது. இதனால், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படுகிறது. காஃபியில் இருக்கும்  வேதிப்பொருட்கள் இதயத்துக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. அளவுக்கு அதிகமாக பருகும் காப்பியின் காரணமாக வாழ்வுகள் விரிவடைந்து பெரும் பாதிப்புகளை உண்டாக்குகிறது.


இப்படியாக ஒரு நாளைக்கு, இரண்டு கோப்பைகளுக்கு மேல் காஃபி அல்லது டீ அருந்தாமல் இருப்பது, சிறப்பானது. ஏனெனில்  உடலுக்கு தேவையான சர்க்கரை, நாம் உண்ணும் உணவுகளிலேயே நிறைந்து காணப்படுகிறது. அதனால் இரண்டு வேளைக்கு மேல் காஃபியோ அல்லது டீயோ குடிக்கும் போது, அதில் உள்ள,சர்க்கரையும்  எதிர்காலத்தில் ஒரு பிரச்சனையை தரும். காஃபி மற்றும் டீயை அளவோடு எடுத்துக் கொள்வது போல, சர்க்கரையையும், பாலையும் குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும்.