காளான் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்குவதற்கு, இரத்த அழுத்தம் சீராக இருக்க, சீரான மூளை செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகிறது. காளான் வளர்ப்பதற்கு பெரிய முதலீடோ அல்லது இட வசதியோ கூட தேவையில்லை; நீங்கள் உண்ணும் காளானை வீட்டுத் தோட்டத்திலேயே உற்பத்தி செய்யலாம் என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள்.


வீகன், காய்கறிகள் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் டி நிறைந்த உணவாக காளான் இருக்கிறது.


காளான் ஏன் சூப்பர்ஃபுட்:



  • Reishi,  shiitake ஆகிய காளான் வகைகளில் பீட்டா குளுகன்ஸ் நிறைந்துள்ளது. இது குடலில் உள்ள மைக்ரோபையோம் ஆரோக்கியமாக வளர உதவுகிறது. செரிமான மணடலம் முதல் நோய் எதிர்ப்பு மண்டலம் வரை சீராக செயல்பட உதவும்.

  • சில வகையான காளான் மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காளான் மூளைகளில் புதிய செல்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும். இதனால் நரம்பு மண்டலம் சீராக இயங்கும். 

  • வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், போதியளவு சூரிய ஒளியை பெறுவதற்கு வாய்ப்பு அல்லது நேரம் இல்லாதவர்கள் ஆகியோருக்கு காளான் ஒரு சூப்பர்ஃபுட். உணவில் அடிக்கடி காளான் சேர்துகொள்வது நல்லது. 

  • LDL கொழுப்பை குறைக்கவும் காளான் உதவும். இதிலுள்ள பொட்டாசியம் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுவதோடு இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 

  • காளானில் உள்ள polysaccharides இன்சுலில்ன் சென்சிட்டிவிட்டியை அதிகரிப்பதுடன் இரத்ததில் குளூகோஸ் அளவை சீராக வைக்க உதவும்.


என்னென்ன தேவை?


வெண்ணெய் - 100 கிராம்


வெங்காயம் - 1 


பூண்டு - 1/4 கப்


உப்பு - தேவையான அளவு


மிளகு - சிறிதளவு


கொத்தமல்லை இலை, ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு


காளான் - 600 கிராம் 


செய்முறை:


காளானை சுத்தப்படுத்த வேண்டும். பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் வெண்ணெயை சேர்க்கவும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். இதோடு பொடியாக நறுக்கிய பூண்டு, சுத்தம் செய்த காளான் சேர்த்து நன்றாக வதக்கவும். மிதமான தீயில் மட்டும் இதை செய்ய வேண்டும். காளான் நன்றாக வேக வேண்டும். 5-7 நிமிடங்கள் வெந்துவிடும். பிறகு, உப்பு, பொடித்த மிளகு, நறுக்கிய கொத்தமல்லி இலை, வெங்காய தாள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். சுவையான பட்டர் கார்லிக் மஷ்ரும் தயார். இதை பிரெட், சப்பாத்தி ஆகிய உணவுகளுக்கு சாப்பிடலாம்.