சிக்கன், பூண்டு, வெண்ணெய், மிளகுதூள் சேர்த்து பட்டர் கார்லிக் சிக்கனை செய்துப்பாருங்கள். அந்த ருசிக்கே அடிக்கடி அடிக்கடி சமைத்து சாப்பிடுவீங்க..


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிக்கனைப் பிடிக்காதவர்களும், ருசிக்காதவர்களும் இருக்க முடியாது. அதற்கேற்றால் போல் சில்லி சிக்கன், சிக்கன் லாபிபப், பெப்பர் சிக்கன், பெப்பர் கிரேவி, கடாய் சிக்கன், மின்ட் சிக்கன், தந்தூரி சிக்கன், சிக்கன் பிரியாணி, உப்புக்கறி என சிக்கன் வகைகளை அடிக்கிக்கொண்டே போகலாம். இப்படி விதவிதாக எப்படி சிக்கனில் ரெசிபிகளை செய்துக்கொடுத்தாலும் மக்கள் விரும்பிச்சாப்பிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் இன்று நாம் பார்க்கவிருப்பது வெண்ணெய், பூண்டு, மிளகுதூள் சேர்த்து செய்யப்படும் பட்டர் கார்லிக் சிக்கன் தான். இதுவரை நீங்கள் இந்த ரெசிபியை செய்யலேன்னா, இப்ப இந்த முறையில செஞ்சுப்பாருங்க..  ருசிக்கு பஞ்சமே இருக்காது.





பட்டர் கார்லிக் சிக்கன் செய்யும் முறை:


தேவையான பொருட்கள்:


சிக்கன்


வெண்ணெய்


மிளகுத்தூள் – தேவையான அளவு


உப்பு- தேவையான அளவு


கான்ஃப்ளவர் மாவு


இஞ்சி பூண்டு விழுது


எலுமிச்சை


வெங்காயத்தாள்


சோயா சாஸ்


செய்முறை:


பட்டர் கார்லிக் சிக்கனை செய்வதற்கு முதலில் சிக்கன், மிளகு தூள், உப்பு, சிறிதளவு கான்பிளவர் மாவு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அனைத்தையும் நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும். இதனை சுமார் 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும்.


இதனையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகுதூள் போன்றவற்றை வைத்து பிசைந்து வைத்துள்ள சிக்கனைப் பொரிக்க வேண்டும்.


ஒரு புறம் சிறிது பொன்னிறம் வந்ததும், திரும்பி மற்றொருபுறம் பொரித்து எடுக்க வேண்டும்.


அனைத்து சிக்கனையும் எண்ணெய் ஊற்றி பொரித்து வைத்த பின்னர் தனியாக ஒரு தட்டியில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


இப்போது பட்டர் கார்லிக் சிக்கன் செய்முறையில் முதற்படி முடிந்துள்ளது. இதனையடுத்து கடாயில் வெண்ணெய் ஊற்ற வேண்டும். வெண்ணெய் சூடானதும் அதில் இஞ்சி, மிளகாய், வெங்காயத்தாள், சோயா சாஸ் போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.





பின்னர் கப்பில் சிறிதளவு கான்ஃப்ளவர் மாவு எடுத்து தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும். இதனையடுத்து கடாயில் வதக்கிக்கொண்டிருக்கும் கலவையில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.


சிறிது நேரம் கழித்து இதனுடன் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு மீண்டும் வதக்கிக்கொள்ள வேண்டும். அடுப்பு மிதமான சூட்டில் இருக்கிறதா?என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.


இறுதியில் சிக்கனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து வதக்க வேண்டும். தற்போது சுவையான பட்டர் கார்லிக் சிக்கன் ரெடியாகிவிட்டது. இதனை சுடசுட சமைத்துப்பரிமாறும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் விரும்பிச்சாப்பிடுவார்கள்..