பாகற்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. இருந்த போதிலும் இதை பெரும்பாலானோர் சாப்பிட விரும்பாததற்கு காரணம் இதன் கசப்புத் தன்மை தான். இப்போது நாம் பாகற்காயை எப்படி கசப்பு இல்லாமல் சுவையாக செய்வது என்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


பாகற்காய் -2 


வெங்காயம் - 2


தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன் 


உப்பு - தேவையான அளவு


கறிவேப்பிலை - 1 கொத்து 


தேங்காய் துருவல் - 1 கப் 


மிகளகாய் தூள் - அரை ஸ்பூன்


சீரகம் - அரை ஸ்பூன் 


மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் 


சின்ன வெங்காயம் - 5


புளி - மிக மிக சிறிய துண்டு 


செய்முறை


இரண்டு பெரிய பாகற்காய் மற்றும் பெரிய வெங்காயம் இரண்டை எடுத்துக் கொள்ளவும்.  இவை இரண்டையும் தனித்தனியாக பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். 


பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்க்கவும். பொரிந்ததும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பாகற்காயை சேர்க்க வேண்டும். 


இதனுடன் சிறிது உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் வதக்கி கொள்ள வேண்டும். பின்பு சிறிது நேரம் மூடிப்போட்டு வேக வைக்க வேண்டும். 


இதற்கிடையே மிக்ஸி ஜாரில் 1 கப் துருவிய தேங்காய், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். அரை ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை ஸ்பூன் சீரகம், 5 சின்ன வெங்காயம் ஒரு மிக சிறிய துண்டு புளி சேர்த்து 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 


அதற்குள் பாகற்காய் நன்றாக வெந்திருக்கும். வேகவில்லையென்றால் கிளறி விட்டு மீண்டும் சிறிது நேரம் மூடிப்போட்டு வேக வைக்க வேண்டும். 


பாகற்காய் நன்றாக வெந்ததும் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை இதனுடன் சேர்க்க வேண்டும். மிக்ஸி ஜாரை கால் டம்ளர் தண்ணீரில் அலசி அந்த தண்ணீரையும் கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 


இதை நன்றாக கிளறி விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து உப்பை சரிப்பார்த்து வேண்டுமென்றால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். 


தேங்காயின் பச்சை வாசம் போகும் வரை கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். கடைசியாக சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கி கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான பாகற்காய் பொரியல் தயார். 


மேலும் படிக்க 


Poha Breakfast: வித்தியாசமான டேஸ்ட்டி காலை உணவு.. கார அவல் கொழக்கட்டை ரெசிபி...செய்முறை இதோ!


Instant Crispy Dosa: இன்ஸ்டண்ட் மொறு மொறு தோசை... அதற்கு ஏற்ற சூப்பர் சட்னி : இப்படி செய்து அசத்துங்க!