ஆட்டிறைச்சியில் கிரேவி, வறுவல், குருமா உள்ளிட்டவற்றை செய்யலாம். பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி இதிலிருந்து வேறுபட்டு ஒரு தனி சுவையுடன் இருக்கும். வாங்க பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
350 கிராம் ஆட்டிறைச்சி,1/2 கப் தயிர், 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1 டீஸ்பூன் கடுகு எண்ணெய்.
கறிக்கு:
1 தேக்கரண்டி கடுகு எண்ணெய்,
1 பே இலை,
1-2 கருப்பு ஏலக்காய், 1-2 பச்சை ஏலக்காய், 1 இலவங்கப்பட்டை
2-3 கிராம்பு, 2-3 காய்ந்த சிவப்பு மிளகாய், ஒரு சிட்டிகை சர்க்கரை,
1 கப் வெங்காயம் நறுக்கியது, 1 டீஸ்பூன் இஞ்சி நறுக்கியது,
1 தேக்கரண்டி பூண்டு நறுக்கியது,
1-2 சிறிய உருளைக்கிழங்கு நறுக்கியது, 1/2 தேக்கரண்டி மஞ்சள்(haldi),
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், உப்பு- சுவைக்கேற்ப,
1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்,
நெய்-தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய் -தேவைக்கேற்ப,
1 தேக்கரண்டி கரம் மசாலா, தண்ணீர்-தேவைக்கேற்ப.
செய்முறை
1.பெங்காலி ஸ்டைல் மட்டன் கறியை செய்ய முதலில், கறியை மசாலாக்களுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இதற்கு, ஆட்டிறைச்சி துண்டுகளை நன்றாக கழுவி, பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
2.அதை மூடி, சுமார் 2-3 மணி நேரம் குளிரூட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, இலவங்கப்பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், காய்ந்த மிளகாய், பே இலைகள், கிராம்பு மற்றும் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும். இதனை கிளறி விட வேண்டும்.
3. இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அவை பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் அனைத்து மசாலாவையும் சேர்த்து தொடர்ந்து வதக்கி விட வேண்டும்.
4.இப்போது, உருளைக்கிழங்குடன் மசாலா உடன் ஊற வைக்கப்பட்ட மட்டன் துண்டுகளை சேர்த்து 5-6 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இதில் தண்ணீர் சேர்த்து, கடாயை ஒரு மூடியால் மூடி, 30-40 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும்.
5.அதன் மேல் ஃப்ரெஷ் கொத்தமல்லி இலைகள், கீறிய பச்சை மிளகாய் மற்றும் நெய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இப்போது சுவையான பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி தயார்.
மேலும் படிக்க