சக்கரைவள்ளி கிழங்கு நம் ஊரில் சரலமாக கிடைக்கும் ஒன்றாகும். பொதுவாக கிழங்கு வகைகள் சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும் என நினைப்பது உண்டு. ஆனால் சக்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் நன்மைகள் ஏராளம். இதில் வைட்டமின் சி, பி, மினரல் சத்துக்கள், நார்ச்சத்து, ஆண்டி – ஆக்ஸிடண்ட்ஸ் என அனைத்தும் நிறைந்துள்ளது. உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும். குழந்தைகள் மெலிந்து இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை இந்த கிழங்கை வேக வைத்து கொடுக்கலாம். 8 மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கிழங்கை சாப்பிடலாம்.


உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் இந்த கிழங்கை தாராளமாக சாப்பிடலாம். சக்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் உடலில் வாயுத்தொல்லை அல்லது கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது என கூறுகின்றனர். சக்கரைவள்ளி கிழங்கில் ஃபோலேட் சத்து அதிகமாக உள்ளதால் பெண்களுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆண்டி ஆக்ஸ்சிடண்ட அதிகம் இருப்பதால் ப்ரீ ராடிகள் செல் அழிவுகளை தடுக்கும் மேலும் இளமையுடன் இருக்க உதவும்.


சக்கரைவள்ளி கிழங்கி இயற்கையாகவே இனிப்பு சுவை நிறைந்துள்ளதால் நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடலாமா என்ற கேள்வி இருந்து வருகிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த கிழங்கை தாராளமாக சாப்பிடலாம், இதனை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. சர்க்கரைவள்ளி கிழங்கில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற மினரல் சத்துக்கள் இருக்கின்றன. இவை நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் ஆகும். மேலும், இவை புற்றுநோய் கட்டிகள் உடலில் உருவாகாமல் இருக்க உதவும். நம் உடலில் இருக்கும்  inflammation அதாவது வலியை குறைக்கும்.


இப்படி சக்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளது. இதனை வேகவைத்து அப்படியே சாப்பிடலாம். இல்லையென்றால் வேகவைத்து நன்கு மசித்து அதில் முட்டை, உப்பு, மைதா அல்லது கோதுமை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அதனை தோசையாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதேபோல் வேகவைத்த சக்கரவள்ளி கிழங்கை மசித்து, கோதுமை மாவு, நாட்டு  சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பணியாரமாக சுட்டு சாப்பிடலாம். இவை ஒருபுறம் இருக்க சக்கரைவள்ளி கிழங்கை  பொரியலாகவும், கார குழம்பிலும் சேர்த்து சாப்பிடலாம். ஒரு சிலர் அதனை பச்சையாக சாப்பிடுவார்கள், பச்சையாக சாப்பிடும் போது இதில் இருக்கும் புரத்தை செரிமானம் செய்வது கடினமாக இருக்கும். இந்த கிழங்கை சமைத்து சாப்பிடுவதே சிறந்த முறை என கூறப்படுகிறது.