பலருக்கும் பீட்ரூட் சாப்பிடுவதற்குப் பிடிக்காத உணவாக இருக்கலாம். எனினும், அது உடல்நலனுக்கான பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கும் உணவாக இருக்கிறது. தாதுக்கள், வைட்டமின்கள் முதலான பல்வேறு சத்துகள் இருப்பதால் பீட்ரூட்களை வெவ்வேறு நோய்களுக்கு எதிராக பயன்படுத்தலாம். 


பீட்ரூட் உண்பது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நமது மூளையின் செயல்பாடு என்பது வயது அதிகரிக்கும் போது, அதன் மூப்பிற்கு ஏற்ப குறைந்துகொண்டே வருகிறது. எனினும், பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் காரணமாக நம்முடைய மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் மூளையில் செயல்பாடு மேம்படுகிறது. 


பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை இங்கே கொடுத்துள்ளோம்... 


பீட்ரூட் சாலட்:


காய்கறிகளை சமைத்து மட்டுமின்றி நேரடியாகவும் சாலட் வடிவில் உண்ணலாம். எனினும், அதன் சுவை காரணமாக நேரடியாக உண்ண விருப்பம் இல்லாதவர்கள், அதோடு சிறிதளவு உப்பு, எலுமிச்சை முதலானவற்றை சேர்த்துக் கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு உணவு வேளையின் போதும், இதனைத் தனியாக எடுத்துக் கொள்ளலாம். 



பீட்ரூட் ஜூஸ்:


பீட்ரூட்டை நேரடியாக மென்று விழுங்க முடியாதவர்கள், அதனைச் சாறாக்கி, அதிகாலையில் உணவு வேளையின் போது குடித்துக் கொள்ளலாம். பீட்ரூட் ஜூஸைக் குடிக்கும் போது, அதன் சுவை பிடிக்கவில்லை எனில், அதோடு உங்களுக்குப் பிடித்த காய், கனி முதலானவற்றைச் சேர்த்து மிக்ஸட் ஃப்ரூட் ஜூஸ், மிக்ஸட் வெஜிடபிள் ஜூஸ் முதலானவற்றைக் குடிக்கலாம். 


பீட்ரூட் பரோட்டா:


வட இந்தியர்களால் விரும்பி உண்ணப்படும் ஆலூ பராத்தாவைப் போலவே, பீட்ரூட்டால் நிரப்பப்பட்ட கோதுமை ரொட்டியே பீட்ரூட் பராத்தா என்று அழைக்கப்படும். இதன் சற்றே இனிப்பான சுவை, அதன் தனித்தன்மையை வெளிக்காட்டுகிறது. இதனை ஊறுகாய், தயிர் முதலானவற்றோடு வைத்து உண்ணலாம். 


பீட்ரூட் கபாப்:


பீட்ரூட், கேரட் முதலானவற்றை ஓட்மீல்ஸ், மசாலா முதலானவற்றோடு சேர்த்து கபாப் செய்யலாம். இதனை மாலை நேர ஸ்நாக்ஸ் உணவாக எடுத்துக் கொள்ளும் போது, கூடுதல் சுவைக்காக இதனோடு புதினா சட்னி அரைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 



பீட்ரூட் அல்வா:


நன்கு துருவப்பட்ட பீட்ரூட், பால், சர்க்கரை, ஏலக்காய், உலர்ந்த கனிகள் முதலானவற்றால் பீட்ரூட் அல்வா தயாரிக்கப்படுகிறது. இதன் சுவை பலரையும் ஈர்க்கும். மேலும், சுவை மட்டுமின்றி, இதுவும் பல்வேறு மருத்துவப் பயன்களால் நிரம்பிய உணவு. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண