கோடை வந்துவிட்டது. வெப்பமும் வாட்டத் தொடங்கிவிட்டது. சாலையோர ஜூஸ் கடைகளும், தர்பூசணி பழ வியாபாரமும் கலைகட்டத் தொடங்கிவிட்டது. என்னதான் நுங்கு, இளநீர், தர்ப்பூசணி, பழ ஜூஸ் என்று மக்கள் குடித்தாலும் கோடையில் டெஸர்ட் ரெஸிபிக்களை நாடாதவர் உண்டோ? அப்படியான குளுகுளு டெஸர்ட் விரும்பிகளுக்காக வீட்டிலேயே செய்யக் கூடிய 3 ரெஸிபிக்கள் இதோ..


ஃப்ரூட் கஸ்டர்ட் புட்டிங் (Fruit custard pudding)


(ரெஸிபி செஃப் பங்கஜ் படோரியா)


தேவையான பொருட்கள்:


500 ml பால்


4 மேஜைக்கரண்டி சர்க்கரை


3 மேஜைக்கரண்டி கஸ்டர்ட் பவுடர்


1 பேக் ஜெல்லி


வெனிலா ஸ்பாஞ் கேக்


பழங்கள்


செய்முறை:


1. கஸ்டர்ட் பவுட்ரை அரை கப் பாலில் கரைத்துக் கொள்ளவும்


2. மீதமுள்ள பாலை சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் கஸ்டர்ட் பவுடரப் போட்டு கட்டிபடாமல் தொடர்ந்து நன்றாகக் கலக்கவும். 


3. கஸ்டர்ட் கெட்டியாகும் வரை நன்றாக சமைக்கவும். பின்னர் அதை அடுப்பிலிருந்து இறக்கிவைத்து குளிரவிடவும். 


4. ஜெல்லி பேக்கட்டில் சொல்லியிருக்கும் செய்முறையைப் பின்பற்றி ஜெல்லியை தயாரிக்கவும். பின்னர் தனித்தனி கண்ணாடி குடுவைகளில் ஜெல்லியை ஊற்றி அதன் மீது ஸ்பாஞ்ச் கேக் வைக்கவும்.


5. பின்னர் அதன்மீது சூடான ஜெல்லியை பாதியளவு ஊற்றவும். அது செட்டாக விடவும்.  


6. மேல் அடுக்கில் கஸ்டர்ட் ஊற்றி அதை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவிடவும். 


7. பின்னர் அதன்மீது பழங்களை துண்டுகளாக நறுக்கிப் போட்டு பறிமாறவும்.


2. ஆஃப்கானி ஐஸ்க்ரீம் *Afghani Ice cream)


(ரெஸிபி செஃப் சஞ்சீவி கபூர்)


தேவையான பொருட்கள்:


4 ஆஃப்கன் பிஸ்கட்டுகள்


1 பழுத்த வாழைப்பழம்


½ கப் வெனிலா ஐஸ்க்ரீம்


4 டேபிள்ஸ்பூன் சாக்கலேட் கனாச்சே  


2 டேபிள்ஸ்பூன் துருவிய வால்நட் 


செய்முறை:


1. 4 சிறிய கண்ணாடி டம்ப்ளர்கள் எடுத்துக் கொள்ளவும். ஒவ்வொன்றிலும் ஒரு பிஸ்கட் போடவும். அதை சற்று நொறுக்கிப் போடவும்.  


2. வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி எல்லா க்ளாஸ்களிலும் போடவும்.  


3. ஒவ்வொன்ற்றிலும் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போடவும். 


4. பின்னர் அதில் சாக்கலேட் கனாச்சேவை மைக்ரோவேவில் ஒருநிமிடம் சுடவைத்து சுடச்சுட ஊற்றவும். மேலே பொடியாக நறுக்கிய வால்நட்டைப் போடவும். 


உடனடியாக பரிமாற சுவையான ஆஃப்கானி ஐஸ்க்ரீமை புசிக்கலாம்.


3. மட்கா குல்ஃபி Matka kulfi


(ரெஸிபி பங்கஜ் படோரியா)


தேவையான பொருட்கள்:


500ml பால் + ¼ கப் பால்


1 கப் சர்க்கரை


3 டேபிள்ஸ்பூன் கோவா


1 டேபிள்ஸ்பூன் கார்ன் ஃப்ளவர்


1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்


1 டேபிள்ஸ்பூன் பிஸ்தா


1 டேபிள்ஸ்பூன் முந்திரி


1 டேபிள்ஸ்பூன் பாதாம்


செய்முறை:


1. ஒரு பேனில் பாலை ஊற்றவும். அதை நன்றாக கொதிக்கவிடவும். பின்னர் சிம்மில் வைத்து 20 நிமிடங்கள் தொடர்ந்து கிளறிவிடவும்.


2. பால் சுண்டி பாதியளவு வரும்வரை அதை கிளறிவிடவும்.


3. பின்னர் கால் கப் பாலில் சேர்த்த சோள மாவை அந்த்ப் பாலில் ஊற்றவும். அதில் கோவாவையும், சர்க்கரையையும் சேர்க்கவும்.எல்லாவற்றையும் சேர்த்து 4 முதல் 5 நிமிடங்கள் கிளறிவிடவும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.


4. வெந்நீரில் ஊறவைத்து பாதாம், பிஸ்தா தோல் நீக்கிக் கொள்ளவும்.


5. உலர் கொட்டைகள், உலர் திராட்சைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை வெதுவெதுப்பான பால் கலவையில் சேர்க்கவும். பின்னர் எல்லாவற்றையும் மட்கா மோல்டுகளில் ஊற்றவும்.  


6. அந்த குடுவையை அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி ஃப்ரீஸரில் வைக்கவும். குறைந்தது 8 மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்தால் எல்லாம் தயாராகிவிடும்.