சமைப்பதில் ஆர்வம் உடையவர்கள் புதியதாக சமையலறைக்குள் நுழையும்போது சில அடிப்படை டிப்ஸ்களை மனதில் வைத்துக்கொள்வது மிக முக்கியம்... அவற்றில் சில!


1. செய்முறையை எப்படி நேர்த்தியாகக் கையாள்வது: செய்முறை விளக்கத்தைப் படியுங்கள், அதில் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கவனியுங்கள், அடுப்பை ஆன் செய்வதற்கு முன் அதில் குறிப்பிட்ட பொருள் அனைத்தையும் ஒன்றாக சேகரிக்கவும். முன்கூட்டியே செய்முறை ஒவ்வொன்றையும் கவனமாகப் படியுங்கள், எனவே சமைக்கும் போது அடுத்தது என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். இது சமையல் செய்யும் போது ஏற்படும் குழப்பத்தையும் பிழைகளையும் தவிர்க்கும்.




2. கண்ணீரின்றி வெங்காயத்தை வெட்டப் பழகுங்கள்: மற்றவர்கள் எப்படி கண்ணீரே வராமல் வெங்காயம் நறுக்குகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் சமையலறையில் காலடி எடுத்து வைக்கும் சமயம் உங்கள் கண்கள் நன்றாக இருக்கும். ஆனால் வெங்காயம் நறுக்கத் தொடங்கியதும் கண்ணீர் பொலபொலவென்று கொட்டும். வெங்காயத்தை நறுக்கத் தொடங்கும் முன் உங்கள் கத்தியில் சிறிது வினிகரை தடவவும். பிரபல செஃப் கொர்டான் ராம்சே தனது சமையல் வீடியோ ஒன்றில் மற்றொரு குறிப்பைப் பகிர்ந்துள்ளார் அதாவது வெங்காயத்தை நறுக்கும் முன் வேரை அப்படியே விட்டு விடுங்கள். வேர் அகற்றப்பட்டவுடன், சாறுகள் காற்றில் வெளியிடப்படுகின்றன. எனவே, வெங்காயத்தை நேரடியாக நறுக்கி இறுதியில் அதன் வேர் வரை நறுக்கவும்.


3. மிருதுவான மாவை பிசைவது எப்படி? நீங்கள் பிசைந்த மாவு மிகவும் பிசுபிசுப்பாக இருக்கிறதா அல்லது மிகவும் கடினமாக இருக்கிறதா? இதற்கு முதல் முக்கியத் தேவை பொறுமை. மிகப் பொறுமையாக செய்யத் தொடங்க வேண்டும். நீங்கள் பிசையத் தொடங்கியபிறகு படிப்படியாக தண்ணீர் சேர்க்கவும். இதன் மூலம் எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை கண்காணிக்க முடியும். மேலும், மாவை மென்மையாகவும், பஞ்சுபோன்றதாகவும் மாற்ற, வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தவும். பிசைந்து முடித்ததும், மாவை குறைந்தது 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். 


4. ஒட்டாத  பொலபொல அரிசியை எப்படி செய்வது?
 
முதலில், அரிசியை உலை கொதிக்கும் முன் 3-4 முறை தண்ணீரில் கழுவவும். இது கூடுதல் மாவுச்சத்து மற்றும் பூச்சிக்கொல்லிகளை நீக்குகிறது மற்றும் சமைக்கும் போது ஏற்படும் ஒட்டும் தன்மையை தடுக்கிறது. அரிசியை 15-20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். முதலில் தண்ணீரை கொதிக்க விடவும், பின்னர் அரிசியில் போடவும். மேலும் அரிசி கிட்டத்தட்ட வேகும் வரை கிளறுவதைத் தவிர்க்கவும்.


5. சரியான பாஸ்தாவை எப்படி சமைப்பது?  ​​நம்முடைய பாஸ்தா பொதுவாக சமைக்கப்படாததாகவோ அல்லது அதிகமாக சமைக்கப்பட்டதாகவோ இருக்கும், ஆனால் சரியான பதத்தில் அல்ல. சரியான அமைப்பை அடைய, எப்போதும் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் சேர்க்கவும். சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெயைச் சேர்ப்பது பாஸ்தாவின் பொலபொலப்புத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ஒன்றாக ஒட்டாமல் தடுக்கிறது.