அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன்(Annapoorna Srinivasan) மன்னிப்பு கேட்டது சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், ’’மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீனிவாசன்தான் நேரம் கேட்டார். அவரை யாரும் மிரட்டவில்லை’’ என்று பாஜக எம்எல்ஏ வானதி விளக்கம் அளித்துள்ளார். அந்த பக்கம், சீனிவாசனுக்கு இந்த பிரச்சனை போய்க்கொண்டிருக்க, Annapoorna Coimbatore Instagram பக்கம், ஸ்வீட் பன் வீடியோவை போட்டு விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள் மக்களே... ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு வேண்டி கிடக்கு என்று மைண்ட் வாய்ஸில் வராமல் இல்லை.


இந்த மாதிரி பஞ்சாயத்தெல்லாம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, அன்னபூர்ணா ஸ்வீட் பன்னைப்போல மிருதுவான ஒன்று இல்லையென்றும், அந்த க்ரீமுக்கே தனியா ஒரு ரகசிய ரெசிப்பி இருக்கு என்றும் சோஷியல் மீடியா இன்ஸ்டாவாசிகள் ஒரு பக்கமும், மற்ற தரப்பு இன்ஸ்டாகிராம் வாசிகள், இதெல்லாம் என்ன சென்னையில பிலால் ஓட்டல் ஸ்வீட் பன்னுதான் கெத்து என்றும் போட்டி போட்டுக்கொள்கிறார்கள். அவனவன் பிரச்சனை அவனுக்கு மக்களே..


கோவையில் சிறு குறு தொழில் முனைவோர்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், “ஒவ்வொரு பொருட்களுக்கும் விதவிதமாக ஜிஎஸ்டி போட்டு தருவது பிரச்சனையாக உள்ளது. பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதில் கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி வருகிறது. ஜிஎஸ்டி போடுவதில் கணினியே திணறுகிறது.


எம்.எல்.ஏ வானதி கூட எங்கள் கடையில் சாப்பிட்டுவிட்டு, வரி குறித்து கேட்டிருக்கிறார்” என அமைச்சரிடம் தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், என்று அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் மன்னிப்பு கோரினார்.


‘’நான் எந்தக் கட்சியிலும் இல்லை, தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பொதுவாகத்தான் கேள்வியை முன்வைத்தேன். அது சர்ச்சையாகும் என்று எதிர்பார்க்கவில்லை’' என்று கூறி இருந்தார். இதுதொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.


மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா என்னும் நோக்கில், இதற்கு எம்.பி.க்கள் கனிமொழி, ஜோதிமணி, ராகுல் காந்தி, கார்கே வரை பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அன்னபூர்ணா ஸ்வீட் பன்னுக்கு என்ன அப்படி ஒரு மவுசு என்று சமூக வலைதளவாசிகள் பகிர்ந்து வருகிறார்கள். வாங்க இதைக் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம்..


 






அன்னப்பூர்ணா ஸ்வீட் பன்னைப்போல மிருதுவான ஒன்று இல்லையென்றும், அந்த க்ரீமுக்கே தனியா ஒரு ரகசிய ரெசிப்பி இருக்கு என்றும் சோஷியல் மீடியா இன்ஸ்டாவாசிகள் ஒரு பக்கமும், மற்ற தரப்பு இன்ஸ்டாகிராம் வாசிகள், இதெல்லாம் என்ன சென்னையில பிலால் ஓட்டல் ஸ்வீட் பன்னுதான் கெத்து என்றும் போட்டி போட்டுக்கொள்கிறார்கள். அவனவன் பிரச்சனை அவனுக்கு மக்களே..