Green Chilli Egg Fry : தெருவோர கடைகளில் இதுதான் பெஸ்ட்.. பச்சை மிளகாய் முட்டை ஃப்ரை ரெசிப்பி இதோ..

Spicy Green Chilli Egg Fry : ஆந்திராவின் ஸ்பெஷல் கலர்ஃபுல்லான உணவு இது. சுண்டி இழுக்கும் காரம். ஆந்திராவின் தெருக்களில் மிகவும் பிரபலமான மிளகாய் முட்டை பொரியல் ரெசிபி உள்ளே

Continues below advertisement

இன்று அக்டோபர் 14, 2022 - உலக முட்டை நாள்: இந்த நாளில் இந்த ரெசிப்பியை பகிர்கிறோம்.

Continues below advertisement

Spicy Andra Special Recipe: காரசாரமான மிளகாய் முட்டை பொரியல் டேஸ்ட் பண்றிங்களா பாஸ்... ஆந்திர ஸ்பெஷல் ரெசிபி உள்ளே 

ஆந்திராவின் ஸ்பெஷல் கலர்ஃபுல்லான உணவு சுண்டி இழுக்கும் காரம். ஆந்திரா சமையலில் காரத்திற்கு குறைவே இருக்காது. பெரும்பாலும் பலர் அவர்கள் ஸ்டைலில் உணவுகள் சமைத்து இருப்பர். அதுவும் ஆந்திராவின் தெருக்களில் மிகவும் பிரபலமான அந்த ஸ்டைல் சிக்கன் ரெசிபியை முயற்சி செய்து இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் மிளகாய் முட்டை பொரியல் ட்ரை செய்து இருக்க மாட்டார்கள். இது எந்த வகையிலும் சுவை குறைவாக இருக்காது. மேலும் இதை தயார் செய்து ஒரு சில பொருட்கள் இருந்தாலே போதுமானது. 

ஆந்திர உணவுகள் ருசியாகவும், ரிச்சாகவும் இருப்பதை விடவும் நமது நவீன் சுவை அரும்புகளை கவரும் வகையில் ஏராளமான வகைகளில் இருக்கும். நம்மில் பலருக்கு மெத்துன்னு இருக்கும் இட்லி, மொறு மொறு தோசை, வடை சாம்பார் சாப்பிட விரும்புவோம். அவை எந்த வகையில் குறைந்த உணவு வகைகள் அல்ல. ஆனால் அவற்றை காட்டிலும் தென்னிந்திய உணவு வகைகளின் பட்டியல் மிக மிக நீளமானது. நீங்கள் தோண்டி எடுக்க எடுக்க மாயாஜாலம் போல இருக்கும். ஆழமாக தோண்ட தோண்ட ஏராளமான விருப்பங்களை பார்க்கலாம். தென்னிந்தியாவின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வகையில் சிறந்தவை. கேரளா, செட்டிநாடு, கொங்கு நாடு, தமிழ்நாடு சமையல் என் பல உண்டு. அதே போல ஆந்திர பிரதேசத்தின் தெருக்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மிளகாய் முட்டை பொரியல் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை: 

முட்டை, பச்சை மிளகாய், வெங்காயம் பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை மற்றும் சில மசாலா பொருட்கள் மட்டுமே. 

இந்த பொரியலை செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து கொள்ளவும். தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது கூடுகள் சுவையை கொடுக்கும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து அதன் நிறம் மாறும் வரை மிதமான தீயில் வதக்கவும். பிறகு 5-6 பச்சை மிளகாய் சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும். மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கலக்கவும். அனைத்தும் ஒன்றாக நன்கு கலந்த பிறகு 2-3 முட்டைகளை உடைத்து ஊற்றி அதை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

மிதமான தீயில் முட்டை நன்றாக வேகும் வரை காத்து இருக்கவும். பிறகு சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, கருப்பு மிளகு தூள் சுவைக்கேற்ப சேர்த்து கலந்து விடவும். அதற்கு மேல் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும். ஈஸியான நொடியில் செய்ய கூடிய இந்த மிளகாய் முட்டை பெரிய ஆந்திராவின் ஸ்ட்ரீட்  உணவுகளில் மிகவும் பிரபலமானது. சுவையான ஸ்பைசியான உணவு விரும்பிகளுக்கு இது ஒரு சிறந்த சாய்ஸ்.     

Continues below advertisement
Sponsored Links by Taboola