பிஸ்டாசியோ எனப்படும் பிஸ்தா பருப்புகளில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் சற்று விரிவாகக் காண்போம்.


பிஸ்தா நன்மைகள்:


பொதுவாகவே, ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகையறாக்கள் எப்போதும் உடலுக்கு நன்மை செய்பவை. தினமும் ஒரே வகையான நட்ஸ் வகைகளை சாப்பிடுவதை விட தினம் ஒன்றாக அல்லது தினசரி ஒன்றாக என வகைப்படுத்தி சாப்பிடுவதன் மூலம் உடலில் சத்துகள் குறையாமல் பாதுகாக்க முடியும். அதிலும் பிஸ்தாவை முறையாக சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.


பிஸ்தாவில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள்  நிறைவாக உள்ளன. இதில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைவாக உள்ளது.


எப்படி சாப்பிட வேண்டும்?


நட்ஸ் வகைகளை சாப்பிடுவதற்கு சில வழிமுறைகளும் உண்டு. காலையில் எழுந்ததும் வெறூம் வயிற்றில் பால் சேர்த்து அல்லது தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். அல்லது உணவு இடைவேளை நேரங்களில் மாலை வேளையில் எடுத்துகொள்ளலாம்.


தினமும் 3 அல்லது 4 பிஸ்தா பருப்புகள் எடுத்துகொள்ளலாம். உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பவர்கள் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு. பிஸ்தா இத்தனை நன்மைகளைத் தர அதிலுள்ள 9 வகையான அமினோ அமிலங்கள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.


1. பினைல்அலனின்


பினைல்அலனின் (Phenyl alanine)  என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும்.  இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது.  நரம்பியக்கடத்திகளான டைரோசின், டோபமைன், எபிநெஃப்ரின் மற்றும் நோர்பைன்ப்ரைன் ஆகியவை இந்த அமினோ அமிலத்திலிருந்து தான் உடலால் தயாரிக்கப்படுகின்றன.


2. வாலின்: (valine)


வாலின் என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும்.  வேலைன் ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது மற்றும் தசை வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது


3. திரியோனின் (Threonine) :


திரியோனின் (Threonine என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும்.  இது விலங்குகளினால்/, மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது.  திரியோனின் ஒரு மின் முனைவுள்ள அமினோ அமிலமாகும். இவை,கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற கட்டமைப்பு புரதங்களை உருவாக்குகிறது. இது கொழுப்பு வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது.


4.  டிரிப்டோபான் (Tryptophan) 


டிரிப்டோபான் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்தே இது பெறப்படுகிறது. ஆதலினால் இது இன்றியமையா அமினோ அமிலங்கள் (Essential Amino Acid) என்ற பிரிவினுள் அடங்கும்.  அமினோ அமிலம் டிரிப்டோபான் தூக்கத்துடன் தொடர்புடையது, இது குறைந்தால் தூக்கமின்மை நோய்கள் ஏற்படும். இது செரோடோனின் முன்னோடியாகும், இது பசியின்மை, தூக்கம் மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டுள்ள ஒரு நரம்பியக்கடத்தி ஆகும்.


5. மெத்தியோனின் (Methionine) 


மெத்தியோனின் (Methionine) என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும்.  இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது.  தாவரங்களும் மெத்தியோனின் அமினோ அமிலத்தை எதிலீன் தயாரிக்க உபயோகப்படுத்துகின்றன.  இந்த அமிலம் வளர்சிதை மாற்றம் மற்றும் உடலில் நச்சுத்தன்மை அகற்றுதல் ஆகியனவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. திசு வளர்ச்சி மற்றும் துத்தநாகம் மற்றும் செலினியம், உங்கள் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத தாதுக்கள் ஆகியவற்றை உறிஞ்சுவதற்கும் இது அவசியம்.


6. லியூசின் (Leucine) 


லியூசின் (Leucine) என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும்.  இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது  நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது.  லியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது. இந்த அமினோ அமிலம் புரதத் தொகுப்பு மற்றும் தசைச் செயல்பாடுகளுக்கு முக்கியமானது.  இந்த அமிலம் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது, காயம் குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களை உருவாக்குகிறது.


7.  ஐசோலியூசின் (Isoleucine)
ஐசோலியூசின் (Isoleucine) என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும்.  இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது  நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது.  ஐசோலியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகும்.  
தசை திசுக்களில் அதிக அளவு ஐசோலூசின் உள்ளது, இது தசை வளர்சிதை மாற்றத்தில் பங்குவகிக்கிறது. 
நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும், ஹீமோகுளோபின் உற்பத்திக்கும், ஆற்றல் மட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் இது அவசியம்.
 
8.  லைசின் (Lysine)  


லைசின் (Lysine)  என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும்.  இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது  நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது.  புரத தொகுப்பு, கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களின் உற்பத்தி ஆகியவற்றில் லைசின் பங்கு வகிக்கிறது.
ஆற்றல் உற்பத்திக்கு அவசியமானது. கொலாஜன் மற்றும் எலாஸ்டின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது.


9. ஹிஸ்டிடின் (Histidine) 


ஹிஸ்டிடின் (Histidine) என்னும் அமினோ அமிலம் ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும்.  
ஹிஸ்டமைன், நோயெதிர்ப்பு திறன், செரிமானம் மற்றும் தூக்கம்-விழிப்பு சுழற்சிகளுக்கு தேவையான ஒரு நரம்பியக்கடத்தி. இது ஹிஸ்டிடின் (Histidine) என்னும் அமினோ அமிலம் மூலமாக உருவாக்கப்படுகிறது. நமது நரம்பு செல்களை உள்ளடக்கிய மெய்லின் உறையைப் பாதுகாக்க இந்த ஹிஸ்டிடின் (Histidine) என்னும் அமினோ அமிலம் மிகவும் அவசியமானது.