மனித உடலில் சிறுநீரகத்தின் பணி நாம் அறிந்ததே. உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் செலுத்தி , கழிவுகளை பிரித்து, சிறுநீரக வெளியே அனுப்புகிறது. அதன் ஆரோக்கியம் முதன்மையானது. அதற்கு சரிவிகித உணவு எவ்வளவு முக்கியமானது என சிறுநீரகவியல் நிபுணர் Shailesh Chandra Sahay சொல்லும் அறிவுரைகளை இங்கே காணலாம்.
ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு..
சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் இருக்க சில உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். முதலில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தேவையான உடலில் தண்ணீர் இருந்தாலே, பாதியளவு நோய்கள் ஏற்படாமலிருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
உணவில் சோடியம் அளவை கவனிங்க..
அதிகமாக உடலில் சோடியம் இருந்தால் சிறுநீரில் கால்சியம் வெளியேறுவது அதிகரிக்கும். குறைந்த அளவில் சோடியம் இருப்பது சிறுநீரக செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. சோடியம் அதிகரித்தால் சிறுநீரகம் சீராக செயல்படுவதில் சிக்கல் ஏற்படும்.
கால்சியம் சத்து மிகச்சீராக இருக்கனும்..
கால்சியம் சத்து சிறுநீரக செயல்பட்டிற்கு தேவையானது என்றாலும் சப்ளிமெண்ட்களாக எடுத்துகொள்ளாமல், உணவிலிருந்து கிடைக்கும் கால்சியம் சத்துகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சரிவிகித அளவில் டயட் இருக்க வேண்டும்.
இதோடு உணவில் கீரை, தக்காளி ஜூஸ், சால்ட், கத்தரிக்காய், காலிஃப்ளார், மஸ்ரூம் உள்ளிட்டவற்றை தினமும் சேர்த்து கொள்ளவும்.
உடல் ஆரோக்கியம் முக்கியம்
- உடல் ஆரோக்கியமாக இருக்க தினம் ஒரு அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.இது முழு உடலையும் ஆரோக்கியமாகவும்,சுறுசுறுப்பாகவும் வைத்து இருக்கும்.
- ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இயங்க உதவும். அடிக்கடி சிறுநீரக கல் பிரச்சனையினால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது சிறந்த நிவாரணமாக இருக்கும். தண்ணீர் குடிப்பது சிறுநீரகம் கழிவுகளை வெளியேற்ற உதவியாக இருக்கும்.
- சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும் 30% அதிகமானோருக்கு சிறுநீரக செயலிழப்பு, மற்றும் சிறுநீரக நோய் பிரச்சனை வரும். அதனால் நீரிழுவு நோய் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.
- அளவான உப்பு எடுத்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான உப்பு எடுத்து கொள்வது, சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேண்டாமே.
- இரவில் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டாம்.
- சிறுநீரகம் ஓய்வெடுக்க வேண்டும். இரவில் நன்றாக தூங்க வேண்டும்.
- ஆல்கஹால், புகைபிடிப்பதை தவிர்க்கவும்.
- சிறுநீரக பிரச்னை இருப்பவர்கள் அளவான புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். புரதச்சத்தை குறைத்து கொள்வது நல்லது.
- மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
’பசி’ உணர்வுக்கு மரியாதை
பசி ஏற்படும்போது சாப்பிட்டு விடுங்க.. அதை புறக்கணிக்க வேண்டும் என்றில்லை. ’கொஞ்ச நேரம் முன்னேதானே சாப்பிட்டோம். அதுக்குள்ள எதாச்சும் சாப்பிட வேண்டும் போல இருக்கே’-ன்னு தோணும்போது உங்கள் உடல் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.. ஏற்கனவே சாப்பிட்டதில் குறைவான ஊட்டச்சத்துகள் இருந்திருக்கலாம். உடலுக்கு எனர்ஜி போதுமான அளவு கிடைக்கவில்லை என்று பொருள். எனவே, பசிக்கும்போது தண்ணீர், ஜூஸ் என ஏதாவது அருந்தலாம்.
நேரத்துக்கு சரியாக சாப்பிடுவதை கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிட நேரமாகிவிட்டால் நட்ஸ், பழங்கள் என ஏதாவது சாப்பிடலாம். நொறுக் நொறுக் என சாப்பிட வேண்டும்போல இருந்தால் மக்கானா, வீட்டிலேயே செய்த முறுக்கு, மிக்சர் கடையில் வாங்கியது என்றாலும் அளவாக எடுத்துகொள்ளலாம்.
உணவோடு போராடாதீர்கள்
சில உணவுகள் உங்களுக்கு பிடிக்கும் என்றாலும் அதை தவிர்க்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம்.அதனால் மனசோர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, வெள்ளை சோறு பிடிக்கும் எனில் அதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும் என்றில்லை. வெள்ளை சோறு சாப்பிடுவதை மகிழ்ச்சியோடு தவிர்ப்பவர்கள் தாராளமாக அதை பின்பற்றலாம். ஆனால், வெள்ளைச் சோறு விரும்பி சாப்பிடுபவர்கள் அதை அளவோடு சாப்பிடலாம். அப்போதுதான் ‘அய்யோ என்னால சாப்பிட முடியலையே’ -ங்கிற உணர்விலிருந்து விடுபட முடியும்.
’நல்லது’, ’கெட்டது’ -ன்னு ஒன்னுமில்லை
’அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை உணர்துகிறது ’Intuitive eating'என்ற முறை. இதன்படி, எந்த உணவையும் நல்லது, கெட்டது என்றெல்லாம் வரையறுக்க வேண்டியதில்லை. உணவின் அளவு மட்டுமே முக்கியம். எந்த உணவை சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம். சாக்லெட் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல்நலனுக்கு கேடு. டயட் என்பதற்காக சாக்லெட் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் என்றில்லை.