செக்ஸின் போது கிளர்ச்சி அடையும் பார்ட்னர்கள் ஒருவரை மற்றவர் கடிக்கும் பழக்கம் சிலரில் உண்டு. சிலருக்குக் கடிப்பது பிடிக்கலாம் அல்லது அப்படி கடிக்கப்படுவது பிடிக்கலாம். சிலருக்குக் கடிப்பதோ அல்லது கடிக்கப்படுவதோ பிடிக்காமல் இருக்கலாம். செக்ஸின்போது கடிக்கும் பழக்கம் உள்ள பார்ட்னர்கள் உடலுறவில் இருக்கும் சமயத்தில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
எப்படிக் கடித்தால் பார்ட்னருக்குப் பிடிக்கும்?
செக்ஸில் எடுத்த உடனேயே பார்ட்னரைக் கடிப்பதைத் தவிர்க்கவும். முதலில் முத்தமிடுவது அல்லது மெல்ல நாக்கினால் வருடுவதிலிருந்து தொடங்கவும். அதன்பிறகு கடிக்க முற்படலாம். உங்கள் பார்ட்னரின் விருப்பம் அல்லது அவர்களுடைய கஃம்பர்ட்டைப் பொருத்தும் இது மாறுபடும்.
எங்கெங்கே கடிக்கவேண்டும்?
கண்கள் பார்க்கும் அத்தனை இடங்களையும் கடிப்பது இல்லாமல் உங்கள் பார்ட்னருக்குக் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்பதை அறிந்து அங்கே கடிக்கலாம். சிலருக்கு கழுத்து, காது, மார்பு, இடுப்பு இப்படி குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கிளர்ச்சி உண்டாகும். குறிப்பாக கிளர்ச்சியுடன் தொடையின் இடையே கடிப்பது பெரும்பாலான பார்ட்னர்களுக்கு கிளர்ச்சியை அதிகரிக்கும்.
பிறப்புறுப்புகளைக் கடிக்கும் பழக்கம் உள்ள பார்ட்னர்கள் பற்களைச் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. மேலும் அந்தப் பகுதியின் சதைகள் மென்மையானது என்பதால் வலி அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
செக்ஸின்போது வலி ஏற்படுவது பார்ட்னர்களுக்குப் பிடிக்கும் என்றாலும் அதிகம் கடிப்பதால் வலி அதிகரித்து செக்ஸுக்கான சூழலை பாதிக்கவும் வாய்ப்பு உண்டு.
செக்ஸின்போது விரைவாகக் கடிக்கப் பழகுங்கள். ஒரே பகுதியில் நீண்ட நேரம் கடிப்பது கூட வலியை அதிகரிக்கும்.
கடித்ததற்கான தடயங்களை எப்படி உண்டாக்குவது?
சிலருக்குக் கடித்ததற்கான தடயங்களை உண்டாக்குவதற்கு நிறைய வழிகள் உண்டு. அதற்காக நீண்ட நேரம் கடிக்க வேண்டும் என நினைப்பது தவறு. அதற்கு வேறு பல வழிகள் இருக்கின்றன.
உடலின் சென்ஸிட்டிவான பகுதிகளில் பற்கள் பதிப்பதைத் தவிர்க்கவும் அந்தப் பகுதியில் சிறியதாகக் கடிக்கலாம் (Nibbling)
கடிக்கும்போது அதிகம் எச்சில் படாமல் பார்த்துக்கொள்ளவும். சிலருக்கு அதிகம் எச்சில்படுவது சங்கடமாக இருக்கலாம்.
உங்களுக்குக் கடிக்கப் பிடிக்கும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு அதிகம் கடிக்க வேண்டாம். சிலருக்கு மார்பில் கடிக்கப்படுவது பிடிக்கும் ஆனால் எல்லோருக்கும் அது பிடிக்கவேண்டும் என்றில்லை. உங்கள் பார்ட்னருக்கு அது பிடிக்குமா இல்லையா என்பதை முதலில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். கடிக்கப்படுவது பிடிக்கும் என்றாலும் கடிக்கும்போது பார்ட்னருடைய முக பாவங்களை கவனிக்கவும். ஒருவேளை அவர்களுக்குச் சங்கடமாக இருந்தால் அப்போதே கடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். சதை அதிகம் இருக்கும் பகுதிகளில் கடிக்கலாம். சதைகள் அதிகம் இல்லாத கிளர்ச்சியூட்டும் பகுதிகளில் சிறியதாகக் கடிப்பது நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.