ஆணுறை விளம்பரங்களை மட்டுமே பார்த்த நமக்கு பெண்ணுறை என்கிற சொல்லே புதியதாகத்தான் இருக்கும். ஆனால் ஆணுறையைவிட பெண்ணுறையில் செக்ஸின் போது அட்வாண்டேஜ் அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள். முதலில் பெண்ணுறை என்றால் என்ன?


பெண்ணுறை என்பது ஒரு நீண்ட பிளாஸ்டிக் பை ஆகும், இது பொதுவாக நைட்ரைல், லேடக்ஸ் இல்லாத ரப்பரால் ஆனது. இது உடலுறவின் போது பெண்ணுறுப்பின் உள்ளே செல்கிறது. இந்த உறையின் இரு முனைகளிலும் உள்ள நெகிழ்வான வளையங்கள் அதை ஒரே இடத்தில் வைத்திருக்கின்றன. ஆணுறை பெண்ணுறுப்பின் சுவர்களை நலிந்துபோகச் செய்கிறது மற்றும் விந்து மற்றும் பிற திரவங்களை சேகரிக்கிறது.


அதுவே பெண்ணுறையை உபயோகிக்கும் விதம், ஒரு டேம்பானை உபயோகிப்பது போன்றது. இது முதலில் கொஞ்சம் குழப்பமானதாகத் தோன்றலாம், ஆனால் முயற்சி திருவினையாக்கும். பெண்ணுறையைப் பயன்படுத்துவது எப்படி?


ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் புதிய உறையைப் பயன்படுத்தவும். பிறப்புறுப்புகள் ஒன்றோடு ஒன்று தொடர்புக்கு வருவதற்கு முன்பு உறையை வைப்பது நல்லது. பெண்ணுறையின் மூடிய முனையில் லூப் தடவுவது நல்லது. பெண்ணுறையைப் பொறுத்திக் கொள்வதற்கு வாட்டமான நிலையில் நிற்கவும்.நீங்கள் அரைச் சம்மணமிட்டோ அல்லது ஒரு காலை நாற்காலியில் வைத்தபடியோ பெண்ணுறையைப் பொறுத்தலாம்.


உறையின் மூடி பகுதியைத் திருகி பெண்ணுறுப்பில் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் உள்ளே செருகவும். அது உடலுறவின்போது அந்த இடத்தில் அப்படியே இருக்கும்.உறையின் மறுமுனை பிறப்புறுப்புக்கு ஒரு அங்குலம் வரை வெளியே தெரியும்படி பொறுத்தலாம்.


பெண்ணுறைகள் சரியாகப் பயன்படுத்தும் வரை அவை ஆணுறைகளைப் போலவே வேலைசெய்யும். அவை சுமார் 95 சதவிகிதச் செயல்திறன் கொண்டவை, அதாவது ஒரு வருடத்தில், ஒவ்வொரு முறையும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தும் 100 பெண்களில் 95 பேர் கருவுறுவதைத் தவிர்க்கிறார்கள். இதுவே ஆணுறையில் 98 சதவிகிதம் வரைத் தவிர்க்கப்படுகிறது என்பது வேறு கதை.பெண்ணுறையை சரியாகப் பயன்படுத்தாத பெண்களில் ஒவ்வொரு ஆண்டும் 21 சதவிகிதம் பேர் கருவுறுகிறார்கள். இதுவே ஆணுறையில் 18 சதவிகிதம். இவை பாலியல் நோய் பரவும் வாய்ப்பை நீக்காது என்றாலும் அவை தொற்றும் வாய்ப்பைக் குறைக்கின்றன. நாம் பயன்படுத்தும் காண்டம் நமது தேர்வுதான் என்றாலும் பார்ட்னர்களில் பலர் ஆணுறையை விடப் பெண்ணுறையையே விரும்புகிறார்கள்.


மேலும், உடலுறவுக்கு 8 மணிநேரம் முன்பே பெண்ணுறையைப் பொறுத்தலாம், அதனால் உடலுறவு சமயத்தில் அதில் கவனம் தவறுவதில்லை. தங்கள் பார்ட்னர் ஆணுறை அணியவேண்டாம் என நினைக்கும் பெண்கள் பெண்ணுறையைப் பயன்படுத்தலாம். லேடக்ஸ் அல்லாத மெட்டீரியலில் தயாரிக்கப்படுவது என்பதால் தோல் எரிச்சலைத் தவிர்க்கமுடியும்.பார்ட்னர் பிறப்புறுப்பு விரைப்புத் தன்மை குறைந்தாலும் பெண்ணுறை அப்படியே இருக்கும். உடலுறவுக்குப் பிறகு உடனடியாக அதனை நீக்க வேண்டிய அவசியம் இல்லை.