கரூர் மாவட்டத்தில் உள்ள 241நகர்ப்புற உள்ளாட்சி பதவிக்கு 143 மையங்களில் 398 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரிரு வார்டுகளில் சிறு,சிறு பிரச்சனைகளுடன் வாக்குப் பதிவு அமைதியாக நடந்தது. கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் ஆகிய 3 நகராட் சிகள், அரவக்குறிச்சி, புஞ்சைதோட்டக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம்,  பழைய ஜெயங்கொண்டம், மருதூர், நங்கரவம் ஆகிய 8 பேரூராட்சிகளில் உள்ள 246 வார்டுகள் உள்ளன.




இதில் கரூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 4 பேரூராட்சி வார்டுகளில் 4 வார்டுகள் என மொத்தம் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 241 வார்டுகளுக்கு  வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் கரூர் மாவட்டம் முழுவதும் திமுக கூட்டணியே அதிக அளவில் வெற்றி பெற்றனர்.



பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சி பகுதியில் 3வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோவிந்த் 174 வாக்குகள் பெற்றிருந்தார். திமுக வேட்பாளர் 173 வாக்குகள் பெற்றிருந்தார் இதனால் பாஜக வேட்பாளர் கோவிந்த் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஆளும் கட்சி ,எதிர்க்கட்சியை தோற்கடித்து ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ABPநாடு தளத்துடன் இணைந்திருக்கவும்- https://tamil.abplive.com/ 


ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வேட்பாளர் கோவிந்த் தனது வெற்றி சான்றிதழை தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் பெற்றார். அதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் உடன் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் உள்ள சேலம் பைபாஸ் சாலையில் மாவட்ட தலைவர் வி பி செந்தில்நாதன் சந்தித்து சால்வை அணிவித்து தனது வெற்றி சான்றிதழை சமர்ப்பித்தார். இந்நிலையில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வேட்பாளர் கோவிந்த் அவர்களை வரவேற்க பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி அவர் வெற்றியை மற்ற நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டார்.




 


கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு ஓட்டு வாங்கி பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரை பல்வேறு சமூக வலைதளங்களில் பரப்பி அதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமைக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்திய நிலையில் அது ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஆளும் கட்சியான திமுக வேட்பாளரை தோற்கடித்து தற்போது கரூர் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் பாஜக 3வது வார்டு வேட்பாளர் வெற்றி பெற்றதை தற்போது பாஜக கட்சி நிர்வாகிகள் தங்களது சமூக வலைதளங்களில் அவர் வெற்றியைத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.


இதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக ,அதிமுக அடுத்த கட்சியாக பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் அளித்த வாக்குகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.