தான் பார்க்காத உலகத்தையும் தன் பிள்ளை பார்க்க வேண்டும் என தனது தோளில் தூக்கி காண்பிப்பவர்தான் தந்தை... அத்தகைய அப்பாக்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்....
தந்தையர் தினம் பரவலாக ஜூன் 3ஆம் ஞாயிறில் கொண்டாடப்பட்டாலும், ஸ்பெயின், போர்ச்சுகல், உள்ளிட்ட நாடுகளில் மார்ச் 19 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தைவானில் ஆகஸ்ட் 8 ஆம் தேதியும், தாய்லாந்தில் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது. தாய்லாந்தில் முன்னாள் அரசர் புமிபோல் அடுலியாதேஜ் பிறந்த நாளை முன்னிட்டு தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
தந்தையர் தினம் உருவானதற்கான புகழ் அனைத்தும் சொனோரா ஸ்மார்ட் டாட் என்ற பெண்ணுக்கே சேரும். அந்தப் பெண் அவரது தந்தைக்காக அந்த நாளை கொண்டாடினார். அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தாய் இறந்த பின்னர் தனி நபராக இருந்து தனது தந்தை 6 பிள்ளைகளை வளர்த்ததற்காக அவர் அந்த நாளை கொண்டாட ஆரம்பித்தார். ஒரு நாள் அன்னையர் தின நாளில் அவர் கேட்ட பிரசங்கம் ஒன்று தான் தந்தையர் தினத்தை அவரைக் கொண்டாட வைத்தது.
இந்த வருடம் தந்தையர் தினம் இன்று (ஜூன் 19 ஆம் தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. தந்தையர் தினம் கொண்டாடப்படும் தேதி ஆண்டுதோறும் மாறுபடும். காரணம் ஜூன் 3வது ஞாயிறு என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் தேதி மாறுபடும்.
பெரும்பாலான நாடுகளில் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமைகளிலேயே தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தன்று நம்மை பெற்றெடுத்த பயாலஜிக்கல் ஃபாதர் மட்டுமல்ல நாம் யாரையெல்லாம் அப்பா ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறோமோ அவர்களையும் அரவணைத்துக் கொண்டாடலாம்.
இந்தநிலையில் தமிழ் சினிமாவில் தந்தை அன்பை பிரதிபலிக்கும் விதமாக எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும், அதில் வரும் பாடல்கள் ஏதோ ஒரு காரணத்தினால் நம்மை நம் நினைவுகளுடன் இணைக்கும். அந்த வகையில், தந்தைக்கும், பிள்ளைகளுக்கும் இடையேயான உறவை கொண்டாடும் விதமாக தமிழ் சினிமாவில் வெளியான டாப் 8 பாடல்களை இங்கே காணலாம்.
1. ஒரே ஒரு ஊர்க்குள்ளே - (தவமாய் தவமிருந்து) :
2. அன்புள்ள அப்பா.. அப்பா - (சிகரம் தொடு)
3. அப்பன் மவனே வாடா - (போடா போடி)
4. ஆரிரோ ஆராரிரோ - (தெய்வ திருமகள்)
5. ஆனந்தயாழை - (தங்க மீன்கள்)
6. உனக்கென்ன வேணும் சொல்லு - (என்னை அறிந்தால்)
7. தெய்வங்கள் எல்லாம் -(கேடி பில்லா கில்லாடி ரங்கா)
8. வா வா என் தேவதையே -(அபியும் நானும்)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்