இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையர் தினத்தைக் கொண்டாட நீங்கள் ஆயத்தமாகியிருக்கலாம். பரிசுகள் வாங்கியிருக்கலாம். கேக் வாங்கியிருக்கலாம். இன்னும் என்ன ஏற்பாடு வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், டெக்நாலஜி உலகில் வாட்ஸ் அப்பில் ஒரு ஸ்டிக்கர் அனுப்பி வாழ்த்துச் சொல்லாவிட்டால் எப்படி அதற்கான டிப்ஸ் தான் இது.


தந்தையர் தின வரலாறு:


தந்தையர் தினம் பரவலாக ஜூன் 3ஆம் ஞாயிறில் கொண்டாடப்பட்டாலும், ஸ்பெயின், போர்ச்சுகல், உள்ளிட்ட நாடுகளில் மார்ச் 19 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தைவானில் ஆகஸ்ட் 8 ஆம் தேதியும், தாய்லாந்தில் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது. தாய்லாந்தில் முன்னாள் அரசர் புமிபோல் அடுலியாதேஜ் பிறந்த நாளை முன்னிட்டு தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.


தந்தையர் தினம் உருவானதற்கான புகழ் அனைத்தும் சொனோரா ஸ்மார்ட் டாட் என்ற பெண்ணுக்கே சேரும். அந்தப் பெண் அவரது தந்தைக்காக அந்த நாளை கொண்டாடினார். அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தாய் இறந்த பின்னர் தனி நபராக இருந்து தனது தந்தை 6 பிள்ளைகளை வளர்த்ததற்காக அவர் அந்த நாளை கொண்டாட ஆரம்பித்தார். ஒரு நாள் அன்னையர் தின நாளில் அவர் கேட்ட பிரசங்கம் ஒன்று தான் தந்தையர் தினத்தை அவரைக் கொண்டாட வைத்தது.


இந்த வருடம் தந்தையர் தினம் இன்று (ஜூன் 19 ஆம் தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. தந்தையர் தினம் கொண்டாடப்படும் தேதி ஆண்டுதோறும் மாறுபடும். காரணம் ஜூன் 3வது ஞாயிறு என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் தேதி மாறுபடும்.


பெரும்பாலான நாடுகளில் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமைகளிலேயே தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தன்று நம்மை பெற்றெடுத்த பயாலஜிக்கல் ஃபாதர் மட்டுமல்ல நாம் யாரையெல்லாம் அப்பா ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறோமோ அவர்களையும் அரவணைத்துக் கொண்டாடலாம். 


வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர் அனுப்புவது எப்படி?


இந்த தந்தையர் தினத்தன்று வாட்ஸ் அப்பில் உங்கள் தந்தைக்கு அனுப்ப நிறைய ஸ்டிக்கர்ஸ் உள்ளன.


ஸ்டெப் 1: 


ஸ்டிக்கர் அனுப்ப முதலில் நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்டிக்கர் பேக்ஸ் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அதை உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரிஸ் நிறைய ஸ்டிக்கர் ஆப்ஸ் பாப் ஆகும். இருந்தாலும் நீங்கள் ஆல் ஃபெஸ்டிவல் ஸ்டிக்கர் ஜிஃப்ஸ் என்ற ஸ்டிக்கர் ஆப்பை (All Festival Stickers GIFs)பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




 


ஸ்டெப் 2:


இந்த ஸ்டெப்பை பயன்படுத்தி நீங்கள் விதவிதமான ஃபாதர்ஸ் டே ஸ்டிக்கரை அனுப்ப இயலும். இதற்கு நீங்கள் பெரிதாக மெனக்கிட வேண்டாம். சேட் பாக்ஸை வழக்கம் போல் ஓபன் செய்யவும். பின்னர் கீபோர்டை ஓபன் செய்து ஸ்டிக்கர் பேனலுக்குச் செல்லவும். அதில் உங்களுக்குப் பிடித்த ஸ்டிக்கரை க்ளிக் செய்து அனுப்பவும். அவ்வளவு தந்தைக்கோ அல்லது ஃபாதர் ஃபிகருக்கோ நீங்கள் விரும்பிய ஸ்டிக்கரை அனுப்பலாம்.