இன்று பலரும் வேலை காரணமாக நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களது ஆரோக்கியத்தில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியமான வாழ்விற்கு உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிக மிக அவசியம். தினசரி சில மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். இதனால் உடல் சுறுசுறுப்பாவது மட்டுமல்லாமல் இருதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது. மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் எடை, தூக்கமின்மை, தொப்பை குறைப்பு முதலியவற்றையும் சரியாக நிர்வகிக்கிறது. இரவு படுக்கைக்கு போகும் முன்னர் செய்ய கூடிய எளிமையான ஆனால் மிகவும் வலிமையான சில உடற்பயிற்சிகளை பற்றி இங்கு காண்போம்

ஸ்குவாட்:

இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகளான இடுப்பு, தொடை மற்றும் பாதம் போன்றவற்றை வலுப்படுத்துவதற்கு மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஸ்குவாட். இவை தசைகளை இறுக்கி பிடித்து திறம்பட செய்கிறது.





பிளாங்க்:

எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக செய்ய கூடிய உடற்பயிற்சிகளில் ஒன்று பிளாங்க். இதன் மூலம் உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை பெறுவதுடன் உடலுக்கு தேவையான வலிமையை முற்றிலும் இந்த ஒரே உடற்பயிற்சி கொடுத்துவிடும்.  

கர்ட்ஸி லுன்ஸ்:

இந்த உடற்பயிற்சி மூலம் கால்களின் தசை பகுதிகளை பலப்படுத்தலாம். இந்த பயிற்சி இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் மற்றும் மிக சிறிய தசைகளையும் பலப்படுத்த உதவுகின்றன. இருப்பினும் மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் இந்த உடற்பயிற்சியை தவிர்க்கலாம்.

புஷ் அப்ஸ் :


முழு உடலின் தசைகளையும் ஈடுபடுத்தி செய்யக்கூடிய ஒரு பயிற்சி தான் புஷ் அப்ஸ். இதனை செய்ய எந்த ஒரு கருவியும் தேவைப்படாது. மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த பயிற்சி. இதை செய்வதன் மூலம் இதய துடிப்பு அதிகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது.  





கவனத்தில் கொள்ள வேண்டியவை:


இந்த உடற்பயிற்சிகள் அனைத்தும் உங்கள் உடலையும் மனதையும் பலப்படுத்தும். இருப்பினும் தூங்குவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பு உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஏனெனில் உங்கள் உடல் உடற்பயிற்சி செய்வதால் நரம்பு மண்டலத்தை தூண்ட செய்து இதய துடிப்பை அதிகரிக்க செய்வதால் தூக்கம் பாதிக்கப்படும். அதனால் தூங்குவதற்கும் உடற்பயிற்சி செய்வதற்கும் இடையில் சில மணி நேரங்கள் இடைவெளி அவசியம். உடற்பயிற்சி செய்த பின்னர் தூங்குவதற்கு முன் சூடான நீரில் குளிப்பது மிகவும் நல்லது. அப்படி குளிப்பதன் மூலம் உங்கள் தசைகள் தளர்த்தப்படும். அது உங்களை ரிலாக்ஸ் செய்ய உதவும். உடற்பயிற்சி செய்யுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண